"மொதல்ல இத Delete பண்ணுங்கப்பா".. ரசிகர் கேட்ட கேள்வி.. தினேஷ் கார்த்திக் கொடுத்த வைரல் ரியாக்ஷன்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரராக இருப்பவர் தினேஷ் கார்த்திக். தமிழக வீரரான இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக அட்டகாசமாக ஆடியிருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | 72 பேர் பலியான நேபாள விமான விபத்துக்கு இதுதான் காரணமா?.. விசாரணைக்குழு வெளியிட்ட பகீர் தகவல்..!
இதன் காரணமாக சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு தினேஷ் கார்த்திக்கிற்கு கிடைத்திருந்தது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்காக தினேஷ் கார்த்திக் தேர்வாகி இருந்தார். இதற்கடுத்து தற்போது அவர் மீண்டும் இந்திய அணியில் அதிகம் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், நாளை (09.02.2023) ஆரம்பமாகவுள்ள பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராகவும் தினேஷ் கார்த்திக் பணிபுரிய உள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இதற்கு முன்பும் 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக பணிபுரிந்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
அப்படி இருக்கையில் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார் தினேஷ் கார்த்திக். அப்போது, ரசிகர்கள் பலரும் பல விதமான கேள்விகளையும் எழுப்ப, அனைத்திற்கும் பதிலளித்திருந்தார் தினேஷ் கார்த்திக்.
Images are subject to © copyright to their respective owners.
அப்போது ரசிகர் ஒருவர், 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி இருந்த ஸ்கோர் போர்டின் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, "உங்களின் இன்னிங்ஸ் குறித்து ஒரு வார்த்தை கூறுங்கள்" என ஜாலியாக குறிப்பிட்டிருந்தார். இதனை கவனித்த தினேஷ் கார்த்திக், "இதை இப்போதே டெலிட் செய்யுங்கள்" என சற்று கலகலப்பாகவும் பதில் கூறியிருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
நியூசிலாந்து அணிக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு நடந்த அரை இறுதி போட்டியில் இந்திய அணி 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தன. இதன் பின்னர் ஆட வந்த தினேஷ் கார்த்திக், பவர்பிளே ஓவர்களுக்குள் சற்று நிதானமாகவே ஆடவும் செய்திருந்தார். விக்கெட்டுகள் ஒரு பக்கம் அதிகமாக சென்ற காரணத்தினால், மெல்ல மெல்ல ரன் சேர்க்கவும் முயற்சித்த சூழலில் அவர் அவுட்டாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அந்த நேரத்துல விராட் அணி, ரோஹித் அணின்னு பிளவு இருந்துச்சா?".. பல வருசம் கழிச்சு தெரியவந்த ஷாக்!!
- அதுக்கு வாய்ப்பு இல்ல ராஜா.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாடு.. அஸ்வின் சொல்லும் புதுக்கணக்கு..!
- என்ன ரங்கா பழசை மறந்துட்டியா.. சீண்டிய ஆஸி.. ஆகாஷ் சோப்ராவின் பங்கமான கமெண்ட்😅..!
- "அவரை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்".. இந்திய வீரர் பத்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா சொன்ன விஷயம்..!
- "இது தான் சரியான நேரம்"... திடீர்ன்னு ஆஸ்திரேலியா கேப்டன் எடுத்த முடிவு.. கலங்கிய ரசிகர்கள்!!
- ஷிகர் தவான் & ஷ்ரேயாஸ் அய்யரின் தீயான டான்ஸ்.. மொத்த டீமும் கமெண்ட்-ல இறங்கிடுச்சு😂.. வீடியோ..!
- "ஜஸ்ட் மிஸ்ஸு".. 2007 டி 20 WC ஃபைனல் -ல தோனி போட்ட தப்புக்கணக்கு??.. இத்தனை நாள் கழிச்சு வெளிய வந்த விஷயம்!!
- "இதோட தான் பொழுது விடிஞ்சது.. யாரு பார்த்த வேலை இது?".. கலாய்த்த அஷ்வின்.. என்ன ஆச்சு?
- "அஸ்வின் -அ Face பண்ணியே ஆகணுமே".. டூப்ளிகேட் அஸ்வினை கையில் எடுத்த ஆஸ்திரேலியா.. "யாருப்பா இந்த பையன்?
- "தோனிக்காக தான் விளையாடினேன்.. அப்புறம் தான் நாட்டுக்காக".. உருகிய சின்ன தல ரெய்னா..!