'இது இந்திய அணி இல்ல... விக்ரமன் சார் படம்'!.. குருணால் சாதனையின் போது ஹர்திக் செஞ்சத பார்த்து... மனதை உருக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

குருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா இடையே இருக்கும் சகோதரப் பாசத்தை தினேஷ் கார்த்திக் தனது அருமையான, அழகான வார்த்தைகளால் ட்வீட்டில் வர்ணிக்க அந்த வார்த்தைகளில் மனம் உருகி போய் விட்டார் ஹர்திக் பாண்டியா.

குருணால் பாண்டியா தன் அறிமுக ஒருநாள் போட்டியில் அதிவேக அரைசதம் கண்டு உலக சாதனை புரிந்தார். குருணால் அடிக்க அடிக்க ஹர்திக் பாண்டியா பெவிலியனில் கைதட்டிக் கொண்டே இருந்தார்.

இந்த கைதட்டல் புகைப்படம் வீடியோவாக வலம்வர அதை அழகான ஆங்கிலத்தில் டைட்டில் ஆக்கி கவித்துவமாக ட்வீட் செய்திருந்தார், தினேஷ் கார்த்திக்.

இங்கிலாந்து உடனான முதல் ஒரு நாள் போட்டியில், இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்த போது ராகுலும், குருணால் பாண்டியாவும் சேர்ந்து சதக்கூட்டணி அமைத்தனர். 10 ஓவர்களில் 112 ரன்களை விளாசினர்.

குருணால் 31 பந்துகளில் 58 ரன்களை விளாசித்தள்ளினார். இந்தியா வெற்றி பெற்றதற்கு இந்த இருவரது ஆட்டம் பெரிய பங்களிப்பு செய்தது. அதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றது.

இந்நிலையில், சகோதரன் குருணாலின் இன்னிங்ஸை நெகிழ்ச்சியுடனும் பாசத்துடனும் ரசித்து ஹர்திக் பாண்டியா கைதட்டிய புகைப்படத்தைப் பகிர்ந்த் தினேஷ் கார்த்திக் கவித்துவமான வார்த்தைகளில் , “மங்கலான, தெளிவற்ற முன்புறம், கர்வமிக்க பெருமைக்குரிய பின்புலம், இன்னும் மகிழ்ச்சியான நபர் மேலிருந்து இருவரையும் கவனிக்கிறார். என்ன ஒரு ஆட்டம் குருணால் பாண்டியா. ஆனால், இந்தப் படம் ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா இடையேயான குடும்ப பாசத்தைக் காட்டுகிறது, தன் சகோதரன் மீதான பாசத்தை ஹர்திக் வெளிப்படுத்தும் உணர்ச்சி மிகு தருணம். குடும்பமாக அவர்களுக்குள் உள்ள பிணைப்பை பந்தத்தை எடுத்துக் காட்டுகிறது” என்று ட்வீட் செய்தார்.

இதற்கு ஹர்திக் பாண்டியா மிகவும் நெகிழ்ச்சியுடன், தினேஷ் கார்த்திக்கை 'தினோ' என்று செல்லமாக குறிப்பிட்டு, “Love you our Dino” என்று பதிவிட்டது சமூக ஊடகஙக்ளில் வைரலாகி வருகிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில் பாண்டியா சகோதர்கள் முதல் முறையாக ஓய்வறையைப் பகிர்ந்து கொள்கின்றனர். மும்பை இந்தியன்ஸ், டி20 போட்டிகளில் ஐபிஎல் தொடர்களில் இருவரும் ஓய்வறையைப் பகிர்ந்து கொண்டாலும் இந்தியா நீல சீருடையில் ஓய்வறையைப் பகிர்ந்து கொள்வது இதுவே முதல் முறை.

ஹர்திக், குருணால் பாண்டியா சகோதரர்களின் தந்தை ஹிமான்சு பாண்டியா சமீபத்தில் மரணமடைந்ததும், குருணாலின் அறிமுக போட்டியை உணர்ச்சிவயமாக்கியுள்ளது.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்