'ஐபிஎல் போட்டிகளில்...' 'தோனியோட அந்த ஒரு ரெக்கார்ட மட்டும்...' - ஓவர்டேக் பண்ணிய தமிழக வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகளில் அதிக கேட்ச்கள் பிடித்த விக்கெட் கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், தோனியை முந்தினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பில் உள்ளது, இன்று (03-11-2020) நடைபெறும் மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் இடையிலான போட்டியின் வெற்றி,  தோல்வி தான் கொல்கத்தாவின் பிளே ஆஃப் போகுமா என்பதை தீர்மானிக்கும். இந்நிலையில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் அசத்தினார்.

அந்த ஒரு போட்டியில் மட்டும் தினேஷ் கார்த்திக் 4 கேட்ச்களை பிடித்தார். இந்த கேட்ச்களில் பென் ஸ்டோக்ஸுக்கு கமின்ஸ் போட்ட பந்தில் இடது புறம் பறந்து சென்று ஒரு கையில் பிடித்த கேட்ச் வேற லெவல். இது அவரது 110-வது கேட்ச் ஆகும்.

204 போட்டிகளில் தோனி 109 கேட்ச்களைப் பிடித்திருந்த நிலையில் தினேஷ் கார்த்திக் 196 போட்டிகளில் 110 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்