Video : "யோவ், 'சூப்பர்' மேனா நீ??..." ஒட்டுமொத்த மேட்சையே திருப்பி போட்ட... அந்த வேற லெவல் 'கேட்ச்'... வைரலாகும் 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை, பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்புகளை இழந்து வெளியேறியுள்ள நிலையில், மும்பை அணி மட்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

மற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடி வரும் நிலையில், இன்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி தொடரில் இருந்து வெளியேறும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் வீரர் ஸ்டோக்ஸ் அடித்த பந்தை மிக அற்புதமாக கீப்பர் நின்ற தினேஷ் கார்த்திக் கேட்ச் செய்தார். இந்த போட்டியின் திருப்புமுனை விக்கெட்டாக ஸ்டோக்ஸின் விக்கெட் அமைந்த நிலையில், அதனை சற்று தூரத்தில் இருந்தே தினேஷ் தாவி பிடித்தார். 

 

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் தினேஷ் கார்த்திக், இந்த கேட்சை பிடித்து ஒட்டு மொத்த மேட்சையும் மாற்றியமைத்துள்ள நிலையில், அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
 







 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்