பாத்ரூம்ல கண்ணீர் விட்டு அழுத தினேஷ் கார்த்திக்..!? KL ராகுல் பற்றி பேசும்போது உருக்கம்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

                                Images are subject to © copyright to their respective owners.

Also Read | திருமண தேதி என்ன?.. திருதிருன்னு முழிச்ச கணவன்.. கோபத்துல மனைவி செஞ்ச பகீர் காரியம்..!

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரையும் தக்க வைத்துள்ளது. அதே வேளையில் மீதமுள்ள இரு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தகுதி பெறும் வாய்ப்பையும் இந்திய அணி பெறும்.

இந்திய அணி சிறப்பாக செயல்படும் அதே வேளையில் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ரன் குவிக்காமல் இருப்பது கடும் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் கூட சிறந்த இன்னிங்ஸை ராகுல் வெளிப்படுத்தவில்லை. இதனால் அடுத்த இரண்டு போட்டிகளில் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே போல, ராகுல் பேட்டிங் குறித்த விமர்சனங்களையும் ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், ராகுல் குறித்து தெரிவித்துள்ள கருத்து அதிகம் வைரலாகி வருகிறது.

"அடுத்த டெஸ்ட் போட்டியில் அணியில் எடுக்கப்படாமல் ராகுல் அமர வைக்கப்படுகிறார் என்றால் அது ஒரு இன்னிங்ஸால் ஏற்பட்டது கிடையாது. கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் என்ன நடந்தது என்பதற்காக தான் அமர வைக்க முடியும் என்பது நிச்சயமாக அவருக்கும் புரியும். அவர் ஒரு கிளாஸ் பிளேயர். கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மட்டிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர். இந்த கடினமான நேரத்தில் அவருடைய டெக்னிக் தான் பிரச்சனை என நான் நினைக்கவில்லை. அவருக்கு சிறிய இடைவெளி தேவைப்படலாம் என நான் நினைக்கிறேன். ஒரு நாள் தொடருக்கு புதிதாக திரும்பி வாருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக், "இது ஒரு தொழில்முறை உலகம். இது போன்ற ஒரு மோசமான சூழ்நிலையில் இருந்து நீங்கள் சந்திக்க நேரிடும் போது அதை சமாளித்து வெளியில் வரவேண்டும். ஆனால் ஒரு வீரராக நான் எப்படி இந்த தருணத்தில் உணர்ந்தேன் என்றால், அது மிக மோசமாக இருந்தது. எல்லாம் உங்கள் கையை மீறி செல்லும் போது உங்களால் எதுவும் செய்ய முடியாமல் கூட போகும். அப்படி இருக்கும் போது அணியிலிருந்து வெளியேற்றப்பட்டால் அது உங்களுடைய கடைசி இன்னிங்ஸ் என்று கூட உங்களுக்கு தோன்றலாம். நான் டிரஸ்ஸிங் ரூமுக்குள் சென்றபோது அமைதியாக கழிப்பறைக்குள் நுழைந்து ஓரிரு கண்ணீர் சிந்தினேன். உங்களால் வேறு எதுவும் செய்ய முடியாததால் அது ஒரு மோசமான உணர்வாக இருக்கும்" என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அதே போல, கே.எல்.ராகுலுக்கு மாற்று வீரராக சுப்மன் கில் களமிறக்கப்படலாம் என்றும் தனது விருப்பத்தை தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி.. பெரும் எதிர்பார்ப்பில் இந்தியர்கள்.. முழு விபரம்..!

CRICKET, DINESH KARTHIK, KL RAHUL, TEST CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்