பயிற்சி ஆட்டத்தில்.. கேப்டனாக மாறிய தினேஷ் கார்த்திக்.. "ஆரம்பமே வெற்றியோட தொடங்கியாச்சு.." குவியும் பாராட்டு
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, தற்போது இங்கிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது.
இதன் இரண்டாவது நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 416 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும் எடுத்து அசத்தி இருந்தனர்.
தொடர்ந்து, இங்கிலாந்து அணியும் பேட்டிங் செய்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு பின்னர், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளது.
கேப்டனான தினேஷ் கார்த்திக்
ஒரு பக்கம் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் டெஸ்ட் அணியில் இல்லாத இந்திய வீரர்களை வைத்து, டி 20 பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்து, பின்னர் ஐபிஎல் தொடரில் ஜொலித்ததன் மூலம் மீண்டும் இந்திய அணியில் திரும்பியுள்ள சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக், பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது தலைமையில், டெர்பிஷிருக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்கி இருந்தது. ஹர்திக், புவி, சாஹல் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஓய்வில் இருந்த நிலையில், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கி இருந்தனர். இந்த போட்டியில், டாஸ் வென்ற கேப்டன் தினேஷ் கார்த்திக், பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
வெற்றி பெற்ற இந்திய அணி
அதன்படி ஆடிய டெர்பிஷிர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, ஆடிய இந்திய அணி, 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 17 ஆவது ஓவரில் இலக்கை எட்டி இருந்தது. அதிரடியாக ஆடிய தீபக் ஹூடா, 59 ரன்கள் எடுத்திருந்தார். இன்னும் ஒரு டி 20 பயிற்சி ஆட்டம் மீதமுள்ள நிலையில், நாளை (03.07.2022) நார்தம்ப்டன்ஷ்யர் அணிக்கு எதிராக, தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.
இனிமேல் இந்திய அணியில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக், தற்போது தனது திறனை நிரூபித்து, 37 வயதில் இந்திய அணியில் இடம் பிடித்தது மட்டுமில்லாமல், பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி வீரர்களை தலைமை தாங்கும் வாய்ப்பும் முதல் முறையாக அவருக்கு கிடைத்துள்ளது.
இது பற்றி, நெட்டிசன்கள் பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்தாண்டு டி 20 உலக கோப்பைத் தொடரிலும் அவர் இடம் பிடிப்பார் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
கனவில் வந்த நம்பர்கள்.. "கொஞ்ச நாள்ல வாழ்க்கையே மாறிடுச்சு.." கோடி கோடியா அள்ளிக் கொடுத்த அதிர்ஷ்டம்
தொடர்புடைய செய்திகள்
- வெளியேறிய ரோகித் சர்மா.. இந்திய அணியின் புது கேப்டனான பும்ரா! இங்கிலாந்து தொடாரின் லேட்டஸ்ட் அப்டேட்
- இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த BCCI ?... இதுதான் காரணமா?
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முக்கிய வீரர் விலகல்?… சிகிச்சைக்காக வெளிநாடு பயணமா?
- “நான் நெறைய டீம்ல விளையாடி இருக்கேன், ஆனா...!” RCB ரசிகர்கள் பற்றி உருக்கமாக DK சொன்ன வார்த்தை..!
- Level 1 விதிமீறலில் ஈடுபட்ட பிரபல வீரர் ? … இன்னைக்கு ரெண்டாவது Qualifier … கண்டித்த பிசிசிஐ.. பரபரப்பு தகவல்
- “தினேஷ் கார்த்திக் மாதிரி அவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கணும்”.. சீனியர் வீரருக்காக குரல் கொடுத்த ரெய்னா..!
- "3 வருஷம் ஆச்சு அவரை இப்டி பாத்து.." ஐபிஎல் தொடருக்கு பின் தினேஷ் கார்த்திக்கிற்கு அடித்த ஜாக்பாட்..
- மும்பை அணிக்கு ஆதரவாக தினேஷ் கார்த்திக் போட்ட ட்வீட்.. "அதுவும் அவர் போட்ட ஃபோட்டோ இருக்கே.. அது தான் 'செம' வைரல்"
- எங்க Team-ன் KGF ராக்கி இவருதான்… செம்ம மாஸான புகைப்படத்தை வெளியிட்ட RCB!
- அடுத்தடுத்து சிக்ஸர்.. பொளந்துகட்டிய தினேஷ் கார்த்திக்.. பெவிலியனுக்குள்ள வந்ததும் கோலி செஞ்ச மரியாதை.. வைரலாகும் வீடியோ..!