“இனிமே பேட்டிங்’ல மட்டும் Focus பண்ண போறேன்...!” - ‘திடீரென கேப்டன் பதவியை துறந்த வீரர்!!! ..என்ன ஆச்சு???’ - அப்ப யாருங்க புது Captain?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டு வந்த நிலையில், அவர் தனது கேப்டன் பதவியை துறந்துள்ளார்.

அவருக்கு பதிலாக, கொல்கத்தா அணியின் கேப்டனாக இயான் மோர்கன் இனிவரும் போட்டிகளில் செயல்படவுள்ளார். பேட்டிங்கில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் தான் கேப்டன் பதவியில் இருந்து பின் வாங்கியதாக தினேஷ் கார்த்திக் அணி நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் கூறுகையில், 'தினேஷ் கார்த்திக்கின் இந்த முடிவு சற்று  ஆச்சரியமாக இருந்தாலும் அவரது முடிவையே நாங்கள் மனதார ஏற்றுக் கொண்டோம். இந்த சீசனில் கொல்கத்தா அணியை சிறப்பான முறையில் வழி நடத்தியுள்ளார். அணி சார்பாக அவருக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு பதிலாக 2019 உலக கோப்பையை வென்ற கேப்டன் இயான் மோர்கன் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். மோர்கனும், தினேஷ் கார்த்திக்கும் இணைந்து அணியை மிக சிறப்பாக முன் நடத்திச் செல்வார்கள்' என தெரிவித்துள்ளார். 

இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்