ரோஹித் போட்ட தூண்டில்.. மேட்ச்'ல நடந்த சுவாரஸ்யம்.. "இப்படி பண்றதுக்கு செம துணிச்சல் வேணும்"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், ரோஹித் ஷர்மா எடுத்த துணிச்சலான முடிவு, பாராட்டினைப் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

"விராட் கோலிக்கு என்ன தான் ஆச்சு.. இப்டி எல்லாம் இருந்தா சரிபட்டு வராது.." விமர்சித்த ஆகாஷ் சோப்ரா

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரை, இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

முதல் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியிருந்தது.

இந்திய அணியின் செயல்பாடு

இதனால், 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து, அதனை கைப்பற்றவும் செய்துள்ளது. இந்திய அணியின் குறைந்த ஓவர் போட்டியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து நியமிக்கப்பட்டார். இந்த தொடரை இந்திய அணி கைப்பற்ற முக்கிய காரணமே, இந்திய அணியின் துடிப்பான பந்து வீச்சும், ஃபீல்டிங்கும் தான்.

ரோஹித் ஷர்மா அசத்தல்

அதனை சிறப்பாக செயல்படுத்திக் காட்டியதில், கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு முக்கிய பங்குண்டு. ஐபிஎல் தொடரில், மும்பை அணிக்கு தலைமை தாங்கி வரும் ரோஹித் ஷர்மா, அந்த அணி ஐந்து முறை கோப்பையைக் கைப்பற்றவும் முக்கிய காரணமாக இருந்துள்ளார். ஐபிஎல் தொடரில் கேப்டன்சி கொடுத்த அனுபவத்தை, சர்வதேச போட்டிகளிலும் சிறப்பாக செய்து காட்டியுள்ளார் ரோஹித் ஷர்மா.

இந்திய அணி அற்புதம்

அதே போல, மிகவும் துணிச்சலுடன் ரோஹித் எடுத்த சில முடிவுகளும், இந்திய அணிக்கு பெரிய அளவில் பலன் கொடுத்தது. இரண்டாவது போட்டியில், 238 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்த போதும், சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி வெற்றி கண்டது. சரியான நேரத்தில், பந்து வீச்சாளர்களை தக்க முறையில் பயன்படுத்தி, விக்கெட்டுகளை எடுக்க வைத்தார் ரோஹித் ஷர்மா. இதனால், இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

தூண்டில்

இந்நிலையில், ரோஹித் ஷர்மா எடுத்த முடிவு ஒன்றை தினேஷ் கார்த்திக் பாராட்டி, சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓடேன் ஸ்மித் அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, வாஷிங்டன் சுந்தரை பந்து வீசச் செய்தார் ரோஹித் ஷர்மா. வலதுகை பேட்ஸ்மேன் ஒருவருக்கு ஆப் ஸ்பின்னரை பந்து வீசச் செய்வது என்பது மிகவும் துணிச்சலான முடிவு. ஒரு தூண்டில் ஒன்றை போட்டு பார்க்க வேண்டி, ரோஹித் அப்படி முடிவு செய்திருப்பார்.

திறமை வேணும்

சுந்தருடைய சிறப்பம்சமே நெருக்கடியை சமாளித்து, அதற்கேற்ப செயல்படுவது தான். பேட்ஸ்மேன் உங்களில் ஓவரில் அடிக்கப் போகிறார் என்னும் நிலையில், அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றால், உங்களுக்கு அதிகம் திறமை வேண்டும். அதன் மூலம் தான், கேப்டன் மற்றும் பந்து வீச்சாளர் இடையே சிறந்த உறவு மலரும்' என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது போலவே, சுந்தர் உதவியுடன் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஸ்மித்தை அவுட்டாக்கி, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது, ரோஹித் - சுந்தர் கூட்டணி.

"ஏன், உன்னால முடியாதா?.." ஷர்துல் செயலால் கடுப்பான ரோஹித்.. "ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன கேப்டன் போல"

DINESH KARTHIK, ROHIT SHARMA, BRAVE DECISION, IND VS WI, ரோஹித், வெஸ்ட் இண்டீஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்