தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் உள்ளே..! நடராஜன் வெளியே..!- எந்தக் கோப்பைக்காக ‘இந்த’ புதிய அணி தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்காக 20 பேர் கொண்ட அணியை தமிழ்நாடு தயார் செய்துள்ளது. இந்த அணியில் ‘இந்திய அணி’யின் முன்னணி வீரர்களான தினேஷ் கார்த்தி மற்றும் வாஷிண்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் உள்ளே..! நடராஜன் வெளியே..!- எந்தக் கோப்பைக்காக ‘இந்த’ புதிய அணி தெரியுமா..?
Advertising
>
Advertising

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சையது முஸ்தக் அலி கோப்பைத் தொடர் நிறைவு பெற்றது. டெல்லியில் நடந்த இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி தொடர்ந்து 3-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் தினேஷ் கார்த்திக் பங்குபெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் இந்திய அணி சார்பில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட காயம் காரணமாக சையது முஸ்தக் அலி கோப்பைக்கான தொடரில் பங்குபெறவில்லை.

Dinesh Karthik and Washington Sundar are back in team Tamilnadu

தற்போது விஜய் ஹசாரே கோப்பை தொடருக்காக முதல் போட்டியை தமிழ்நாடு அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வருகிற டிசம்பர் 8-ம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அணியின் கேப்டன் ஆக விஜய் சங்கர் மற்றும் துணை கேப்டன் ஆக ஜெகதீசன் ஆகியோர் பொறுப்பு ஏற்றுள்ளனர்.

இந்திய அணியின் சார்பாக விளையாடிய போது ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த நடராஜன் சையது முஸ்தக் அலி கோப்பைத் தொடரில் பங்குபெற்றார். ஆனால், விஜய் ஹசாரே கோப்பை நடராஜன் அணியில் இடம் பெறவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அபராஜித் தற்போது தென் ஆப்பிரிக்காவில் ‘இந்திய A’ அணி சார்பாக விளையாடி வருகிறார். இதனால், அவருக்கு நேரம் கிடைத்தால் விஜய் ஹசாரே கோப்பைத் தொடரின் பிற்பாதியில் வந்து கலந்து கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.

அபராஜித்-ன் இரட்டைச் சகோதரர் ஆன இந்திரஜித் இந்த விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் தமிழ்நாடு அணியின் சார்பில் விளையாடுகிறார். மொத்தமாக அணியில் விஜய் சங்கர் (கேப்டன்), ஜெகதீசன் (துணை கேப்டன்), தினேஷ் கார்த்திக், ஹரி நிஷாந்த், ஷாருக்கான், சாய் கிஷோர், எம் அஸ்வின், சந்தீப் வாரியர், வாஷிங்டன் சுந்தர், சித்தார்த், சாய் சுதர்சன், கங்கா ஶ்ரீதர் ராஜு, முகமது, கெளசிக், சரவண குமார், சூர்ய்பிரகாஷ், இந்திரஜித், சஞ்சய் யாதவ்,கெளஷிக் காந்தி, சிலம்பரசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

CRICKET, VIJAY HAZARE TROPHY, DINESH KARTHIK, WASHINGTON SUNDAR, NATARAJAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்