'எங்க போனாலும்'...'சென்னை'யை அடிச்சிக்க முடியாது மச்சி'...தெறிக்க விட்ட தினேஷ் கார்த்திக்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கியிருக்கும் நிலையில்,இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா அணியினை எதிர்கொள்கிறது.மே 30-ம் தேதி இங்கிலாந்தையும் ஜூன் 2-ம் தேதி வங்கதேச அணியையும் எதிர்த்து விளையாடி தென்னாப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்துள்ளது.எனேவ இந்த போட்டி தென்னாப்பிரிக்கா அணிக்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இதனிடையே உலகக் கோப்பைத் தொடர் தொடங்கி 6 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், இந்திய அணி இன்று தான் தனது முதல் போட்டியில் களமிறங்குகிறது.மே 22-ம் தேதி இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஜூன் 2-ம் தேதி வங்கதேச அணியுடன் விளையாடும் விதமாக அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய அணிக்கான ஆட்டங்களைச் சற்று தள்ளி வைக்குமாறு,பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி யிடம் கோரிக்கை வைத்தது.சர்வ பலம் வாய்ந்த பிசிசிஐயின் கோரிக்கையை மறுக்காத ஐசிசி,அதற்கு சம்மதமும் தெரிவித்தது.இதையடுத்து இந்திய அணிக்கு கிட்டத்தட்ட13 நாள்கள் அவகாசம் கிடைத்தது.

இந்நிலையில் சவுதாம்ப்டன் நகரில் ஓய்வில் இருக்கும் இந்திய வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கரும்,அங்கிருக்கும் சென்னை தோசா கடையின் ரெகுலர் கஸ்டமர் ஆகி விட்டார்கள்.இரவு டின்னர் என்றாலே சென்னை தோசா கடைக்கு சென்று தோசையை ஒரு கட்டு கட்டுகிறார்கள்.'எங்கு போனாலும் நம்ம ஊரு தோசை கிடைக்குது'என தினேஷ் கார்த்திக் பெருமையுடன் கூறியுள்ளார்.

DINESHKARTHIK, CRICKET, BCCI, ICC, ICCWORLDCUP2019, WORLDCUPINENGLAND, ICCWORLDCUP, VIJAY SHANKAR, CHENNAI DOSA, SOUTHAMPTON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்