போனில் அழைத்து வர்ணனை செய்வதை பாராட்டிய MS தோனி.. மனம் நெகிழ்ந்து போன தினேஷ் கார்த்திக்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | இந்திய வீரர்களை வெறுப்பேற்றிய ஆஸ்திரேலிய வீரர்.. அஸ்வின் செஞ்ச செம சம்பவம்.. ரோஹித் வேற உள்ள வந்துட்டாரு.. பரபர வீடியோ!!

இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவுக்கு வந்துள்ள சூழலில், இந்திய அணி 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த இரண்டு முறை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்த சூழலில் தற்போதும் இரண்டு போட்டிகளை வென்று தொடரையும் தக்க வைத்துள்ளது.

வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக்

மேலும் இந்த தொடரில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக இருந்தும் வருகிறார். இவர் மிக அசத்தலாக போட்டிக்கு நடுவே பேசும் விஷயங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் போட்டிக்கு நடுவே ஒரு சில கணிப்புகளையும் மிக துல்லியமாக செய்து பலரின் பாராட்டுக்களையும் தினேஷ் கார்த்திக் பெற்று வருகிறார். கிரிக்கெட் வீரர் என்பதை தாண்டி சிறந்த வர்ணனையாளராகவும் தற்போது தினேஷ் கார்த்திக் பெயர் எடுத்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக இந்திய அணியில் பெரிதும் இடம்பெறாமல் இருந்து வந்த தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக ஆடியதன் பெயரில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இதனை தொடர்ந்து இந்திய அணியில் திரும்பவும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வரும் சூழலில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடருக்கு இடையே வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

தோனி கொடுத்த பாராட்டு

இந்த நிலையில், தினேஷ் கார்த்திக்கின் ஐபிஎல் அணியான ஆர்சிபி போட்கேஸ்டில் தோனி குறித்து அவர் பேசிய சில விஷயங்கள் தற்போது அதிகம் வைரல் ஆகி வருகிறது.

தனது வர்ணனை பற்றி பேசியிருந்த தினேஷ் கார்த்திக், "நான் வர்ணனை செய்வதை பெரிய அளவில் ரசிக்கிறேன். நான் போட்டியை பற்றி மிக ஜாலியாக பேசுகிறேன். அதேபோல போட்டியை மிகவும் ஆராய்ந்து கிரிக்கெட் பார்ப்பவர்கள் மத்தியிலும் அது சரியாக கொண்டு சேரும் அளவில் பேசுகிறேன். மேலும் நான் மனதில் எப்படி நினைத்தேனோ அதனை அப்படியே வெளிப்படுத்தவும் முயற்சி செய்கிறேன்.

எனது வர்ணனைக்கு மிகப்பெரிய பாராட்டு நான் எதிர்பார்க்காத நபரிடம் இருந்து கிடைத்தது. எம்.எஸ்.தோனி என்னை அழைத்து, 'நான் உங்கள் வர்ணனையை மிகவும் ரசித்தேன், நன்றாக இருந்தது' என பாராட்டினார். அதற்கு மிகவும் நன்றி என நான் கூறினேன். அது எவ்வளவு பெரியது என்பது உங்களுக்கு தெரியும். அவர் நிறைய விளையாட்டு பார்க்கிறார். அப்படி இருக்கையில் அவரிடமிருந்து இந்த பாராட்டு வருவது மிகச் சிறந்தது" என குறிப்பிட்டார்.

Images are subject to © copyright to their respective owners.

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ். தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் ஆடி வருகிறார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31-ம் தேதி ஆரம்பமாக உள்ள நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | அவுட் அப்பீல் செய்யும் விஷயத்தில்.. இந்திய அணிக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் செஞ்ச தந்திரம்.. பரபர பின்னணி!!

CRICKET, DINESH KARTHIK, MS DHONI, COMMENTARY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்