"அவரு கண்டிப்பா 'white ball' 'டீம்'க்கு தேவை.. அவர ஏன் ஒதுக்கி வெச்சுருக்கீங்க??..." முன்னாள் 'இந்திய' வீரரின் 'அதிரடி' கருத்து!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், தொடர் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளது.

முன்னதாக, இந்த தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில், 337 ரன்கள் என்ற இலக்கை மிக எளிதாக இங்கிலாந்து அணி எட்டிப் பிடித்தது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் அதிரடியாக ஆடி, வெற்றி பெற உதவினர். இதில், இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் க்ருணால் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர்.

இதனால், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுத்துறை கடுமையான விமர்சனத்தை சந்தித்திருந்தது. இந்நிலையில், ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை இந்திய அணிக்கு திரும்ப கொண்டு வர வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் (Dilip Vengsarkar) தெரிவித்துள்ளார்.

'நான் மட்டும் இப்போது இந்திய அணியின் தேர்வாளராக இருந்திருந்தால், நிச்சயம் அஸ்வினை மீண்டும் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிக்கு கொண்டு வந்திருப்பேன். ஏனென்றால், அவர் அந்த அளவுக்கு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர். அது மட்டுமில்லாமல், தனது பந்து வீச்சில், பல வேறுபாடுகளையும் அவர் பயன்படுத்துகிறார்.


டெஸ்ட் கிரிக்கெட்டில், மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் அஸ்வினை, அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிக்குக் கொண்டு வந்தால், நிச்சயம் அணிக்கு பேருதவியாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

அதே போல, தற்போது அணியில் இருக்கும் வாஷிங்டன் சுந்தருடன், அஸ்வினை ஒப்பிட்டு பார்த்தால், நிச்சயம் அஸ்வின் தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர். ஒரு நாள் போட்டிகளில், சுழற்பந்து வீச்சாளர் பந்து வீசும் போது, மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் எடுப்பதே அவர்களின் வேலை.


அதை அவர்கள் செய்யத் தவறினால், எதிரணியினர் அதனை பயன்படுத்தி, ரன்களை குவித்து விடுவார்கள். அந்த விஷயத்தில், அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளர்' என அஸ்வினை மீண்டும் அணியில் எடுக்கும் என்பதை வலியுறுத்தி, திலிப் வெங்சர்க்கார் பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்