‘அதெல்லாம் வேண்டாம் தாதா’!.. தோனி சொன்ன பதிலை கேட்டு நெகிழ்ந்துபோன கங்குலி.. ‘தல.. தல தாங்க’.. கொண்டாடும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறிய தகவல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வரும் ஐபிஎல் (IPL) தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்றுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் நடந்து முடிந்த முதல் ப்ளே ஆஃப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த சூழலில் ப்ளே ஆஃப் சுற்றின் இரண்டாவது போட்டி இன்று (13.10.2021) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் 15-ம் தேதி துபாயில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணியுடன் மோதுவுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடர் முடிந்ததும், ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ முன்னமே அறிவித்துவிட்டது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி (Dhoni), டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக (Mentor) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தோனி குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதில், ‘டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்பட, தோனி எந்தவிதமான கட்டணத்தையும் வாங்கவில்லை. இதை அவர் ஒரு சேவையாக செய்வதாக கூறினார்’ என சவுரவ் கங்குலி பெருமையோடு தெரிவித்துள்ளார். தோனியின் இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்