"ஒட்டுமொத்த 'இந்தியா'வே பரபரப்பா இருந்த நேரம் அது.." அப்போ தான் 'தோனி' அக்கறையோட ஒரு விஷயம் சொன்னாரு.." கம்பீர் சொன்ன 'சீக்ரெட்'!.. நெகிழ வைத்த 'சம்பவம்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியிருந்தது.

அதன் பிறகு, 28 வருட காத்திருப்புக்கு பின், தோனி தலைமையிலான இந்திய அணி, 50 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. இலங்கை அணிக்கு எதிரான இறுதி போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சேவாக் மற்றும் சச்சின் ஆகியோர் வேகமாக நடையைக் கட்ட, கம்பீர் 97 ரன்களுடன் அவுட்டாகி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கேப்டன் தோனி 91 ரன்கள் அடித்து, இந்திய அணியை வெற்றி பெறச் செய்திருந்தார். அதே போல, கோலி, யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்களும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர்.

இந்நிலையில், இன்றுடன் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றி, 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள், இந்தியாவின் சாதனையை பாராட்டி வருகின்றனர். அது மட்டுமில்லாமல், 2011 ஆம் ஆண்டு உலக கோப்பைத் தொடரின் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களும் இதுகுறித்து பெருமையுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு கடுமையாக போராடிய கவுதம் கம்பீர் பழைய நினைவுகள் பற்றி பகிர்கையில், 'நானும் தோனியும் இணைந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, நான் சதமடிக்க வேண்டும் என தோனி அதிகம் விரும்பினார்.


அது மட்டுமில்லாமல், எனக்கு அதிக ஆதரவையும் அவர் அளித்தார். அவசரப்பட்டு ரன்கள் அடிக்க வேண்டாம் என்றும், சதம் அடிக்கும் வரை நிதானமாக ஆடவும் என்னை அறிவுறுத்தினார்.

 

அப்படி இறுதியில் ரன்கள் அதிகம் அடிக்கும் படி நெருக்கடி ஏற்பட்டால் கூட, நான் வேகமாக ரன்களை குவிக்கிறேன் என நான் சதம் அடிக்கும் விஷயத்தில் தோனி அதிக அக்கறையுடன் இருந்தார்' என கம்பீர் உலக கோப்பையில், தோனியுடனான சிறந்த தருணங்களை நெகிழ்ச்சியுடன் தற்போது தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்