"தூக்கி போடுங்க அந்த மாடல...!" - உணர்ச்சிவசப்பட்ட தோனி!! - 'புதிய பிளானுடன் களமிறங்கும் CSK'...! 'வெறித்தன வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!!'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தொடர் தோல்விகளை சந்தித்துவரும் சிஎஸ்கே பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் படுதோல்வி அடைந்துள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் சிஎஸ்கே மோசமாக தோல்வி அடைந்து வருகிறது. வெற்றி பெற வாய்ப்பு இருந்த போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ள நிலையில், மொத்தம் 7 போட்டிகளில் ஆடிய அந்த அணி இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் சிஎஸ்கே இந்த முறை பிளே ஆப் செல்லுமா என்பதே சந்தேகம் ஆகியுள்ளது. சிஎஸ்கே அணியின் இந்த தொடர் சொதப்பலுக்கு அணி ஒவ்வொரு முறை டாஸில் தோல்வி அடைந்து சேசிங் செய்ததும் காரணமாக பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் சேசிங்கின் போது பேட்டிங்கில் மோசமாக சொதப்பும் சிஎஸ்கே வீரர்கள் கடைசி 5 ஓவரில் அடித்துக் கொள்ளலாம் என பொறுமையாக விளையாடுகிறார்கள். ஆனால் கடைசியில் அதிரடியாக ஆட முடியாமல் சொதப்பிவிட்டு அவர்கள் அவுட்டாகி விடுகிறார்கள். பினிஷிங்கிற்கு பெயர் பெற்ற அந்த அணி தற்போது கடைசி 5 ஓவரில் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியாமல் திணறி வருகிறது. முக்கியமாக சிஎஸ்கேவில் மிடில் ஆர்டர் வீரர்கள் அனைவரும் தோனியை பின்பற்றுவதும் ஒரு பெரிய பிரச்சனையாகி உள்ளது. அதாவது 17 ஓவர் வரை எதுவும் பெரிதாக அடிக்காமல் அதற்கு பின் சிக்ஸ், பவுண்டரி அடித்து ஜெயிக்கலாம் என ஜடேஜா, ஜாதவ், சாம் கரன், ராயுடு போன்ற வீரர்கள் நினைத்து விளையாடி கடைசியில் அப்படி அதிரடியாக ஆட முடியாமல் போகிறது.

இதையடுத்து அணி வீரர்களிடம் இதுபற்றி பேசியுள்ள தோனி கடந்த போட்டிக்கு பின் வெளிப்படையாகவும் இதை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள தோனி, "அணியில் எல்லோரும் கடைசி இரண்டு ஓவரில் அடித்து வின் பண்ண வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் இனிமேல் அப்படி ஆடக்கூடாது. மாறாக மிடில் ஓவரில் அதிரடியாக ஆட வேண்டும். கடைசியில் பார்த்துக்கொள்ளலாம் என ஆடக்கூடாது. அதிரடியாக ஆட வேண்டும்" எனக் கூறியுள்ளார். தன்னுடைய மாடலை பின்பற்றவேண்டாம் எனவும், கடைசி வரை பொறுமையாக ஆட நினைக்க வேண்டாம் எனவும் தோனியே கூறியுள்ளதால், சிஎஸ்கேவின் சேசிங் இனி வரும் போட்டிகளில் வித்தியாசமாக இருக்கும் எனப் பெரிதும் ஏதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்