‘தோனி.. தோனி..’ கத்திய ரசிகர்கள்... திரும்பி முறைத்துப் பார்த்த கேப்டன்... உடனே மாறிய கோஷம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டவர் தோனி. அவருக்கு பிறகு அடுத்த விக்கெட் கீப்பரை உருவாக்கும் முயற்சியாக ரிஷப் பந்த்திற்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்புகள் வழங்கி வருகிறது. ஆனால் தோனி அளவுக்கு சிறந்த விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தால் செயல்பட முடியவில்லை.
ஒவ்வொரு ஆட்டத்திலும் ரிஷப் பந்த் சொதப்பும் போதெல்லாம் மையதானத்தில் ரசிகர்கள் ‘தோனி.. தோனி..’ என முழக்கமிடுவார்கள். அப்படி செய்வது மற்ற வீரர்களை தரகுறைவு செய்வது போல என்பதால் அப்படி கூச்சலிட வேண்டாம் என விராத் கோலி சைகை மூலம் காட்டுவார். இந்நிலையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானப் போட்டியில், ரிஷப் பந்துக்கு காயம்பட்டிருப்பதால், கடைசி 2 ஆட்டத்திலும் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ரிஷப் பந்தை விடவும் சிறப்பாகவே செயல்பட்டதால் ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.
எனினும் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்றைய ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு குல்தீப் யாதவ் வீசிய பந்து, பேட்டில் பட்டு விலகியபோது விக்கெட் கீப்பரான ராகுல் அதை தவறவிட்டார். உடனே ரசிகர்கள் பலர் ‘தோனி.. தோனி’ என கத்த தொடங்கினர். அந்த சத்தத்தை கேட்டு விராத் கோலி திரும்பி முறைத்ததும் ரசிகர்கள் பலர் அமைதியாகினர். உடனடியாக ‘ராகுல்.. ராகுல்..’ என முழக்கத்தை ரசிகர்கள் மாற்றி கத்தத் தொடங்கினர்.
அதன்பிறகு, கே.எல்.ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டும் என்று, கேப்டன் விராத் கோலி முதல் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கே.எல்.ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்வது அணிக்கு சரிப்பட்டு வராது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், `ராகுல் டிராவிட்டை கே.எல்.ராகுல் சிறந்த விக்கெட் கீப்பர்தான். ஆனால், இதனை வழக்கமாக்கி கொள்வதை விரும்பவில்லை. 50 ஓவர்கள் கீப்பிங் செய்துவிட்டு டாப் ஆர்டரில் இறங்கி ஆட முடியாது.
ஒருவர் நல்ல பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்பதற்காக அவருக்கு இன்னொரு வேலையைக் கொடுக்க வேண்டாம். என்னைப் பொறுத்தவரையில், ராகுல் மிகவும் திறமையான வீரர். அவரை விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என்ற ஸ்லாட்டுக்குள் கொண்டு வர வேண்டாம். அப்படிச் செய்வது அவரது பணிச்சுமையை மேலும் அதிகரிக்கும். அணியின் தேவைக்கு ஏற்ப ஒருமுறை அவரை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக பயன்படுத்திக் கொண்டால் பரவாயில்லை. ஆனால், நீண்ட காலத்துக்கு அவரை அந்தப் பணியில் ஈடுபடுத்தாதீர்கள்’ என பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நம்பி எறக்கி விட்டதுக்கு... இப்டி 'மானத்தை' வாங்கிட்டீங்களே ?... தலையில் அடித்துக்கொண்ட 'பிரபல' வீரரின் மனைவி!
- 'கேட்ச்' புடிச்சது கேப்டன் தான்... ஆனா 'நிழலப்' பாத்தா அப்டி தெரியலையே... 'வைரலாகும்' புகைப்படம்!
- Video: உன்ன 'முழுசா' நம்புனதுக்கு... என்ன இப்டி 'வச்சு' செஞ்சிட்டியே தம்பி... கோபத்தில் 'கொந்தளித்த' கேப்டன்!
- ‘இப்ப அவங்களுக்கு நம்ம ரெண்டு பேரோட...’ ‘எங்களோட திறமை மேல நம்பிக்கை இருந்துச்சு..’. மைதானத்தில் நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம்...!
- ‘தல’ தோனி எவ்வளவு நாள் சி.எஸ்.கே.வில் இருப்பார்?... அணி நிர்வாகம் விளக்கம்... குஷியில் ரசிகர்கள்!
- தூங்குறப்ப தான் அவங்க 'ரெண்டு' பேரும் பிரிவாங்க... முன்னணி வீரர்களைக் 'கிண்டலடித்த' கேப்டன்!
- அந்த 'ரெண்டு' பேரும் இல்லேன்னா... ஆஸ்திரேலியாவ 'ஜெயிக்கறது' ரொம்ப கஷ்டமாச்சே... என்ன பண்றது? கடும் 'சிக்கலில்' கோலி!
- ‘கடைசி 5 ஓவர்தான் எங்க டார்கெட்’.. ‘நாங்க ப்ளான் பண்ண மாதிரியே நடந்துச்சு’.. வெற்றி சீக்ரெட் சொன்ன ராகுல்..!
- 'பழிவாங்கப்படுகிறாரா தோனி?!'... 'என்ன நடக்கிறது?'... 'ரசிகர்கள் ஆதங்கம்!'...
- போட்டிக்கு நடுவே... திடீர் திடீர் என 'காணாமல்' போன வீரர்கள்... என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை!