தோனி ஓய்வு முடிவு எடுக்காம இருக்க இவர்தான் காரணமா?.. வெளியான புதிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனியின் ஓய்வு முடிவு குறித்து விராட் கோலி அவரிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி உலகக்கோப்பை முடிந்த உடன் தனது ஓய்வு முடிவை எடுப்பார் என பரவலாக பேசப்பட்டது. அதேபோல் ஐபிஎல் தொடர்களில் தோனி மீண்டும் விளையாடுவாரா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வந்தது. சென்னை அணிக்கான தோனியின் ஒப்பந்தம் சில வருடங்கள் உள்ளதால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என சிஎஸ்கே நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் ஓய்வு குறித்து தோனி இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விராட் கோலி கேட்டுக்கொண்டதால்தான் தோனி தனது ஓய்வு முடிவை மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் உடல் தகுதியில் எந்த பிரச்சனையும் இல்லாததால் வரும் டி20 உலகக்கோப்பை வரை அணியில் இருக்க வேண்டும். ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக இருக்கும் போது அனுபவம் வாய்ந்த மற்றொரு வீரர் தேவை. அதனால் அந்த இடத்தில் தோனி இருந்தால் நன்றாக இருக்கும் என கோலி எண்ணியதாகவும், இதற்காக தோனி தற்போது ஓய்வு முடிவை எடுக்க வேண்டாம் என கோலி கூறியதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தோனி 2 மாதங்கள் பாரா மிலிட்டரியில் பணியாற்ற செல்வதாக கூறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை. அதனால் அவருக்குப் பதிலாக விளையாட இளம்வீரர் ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

BCCI, MSDHONI, VIRATKOHLI, TEAMINDIA, INDVWI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்