"ஏற்கனவே 'மரண' வெயிட்டிங்'ல இருக்கோம்,,.. இதுல இது வேறயா??"... முக்கிய 'சாதனை'களை எட்டக் காத்திருக்கும் 'தல' தோனி!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை ஆடியுள்ள மூன்று போட்டிகளில் இரு அணிகளும் ஒன்றில் மட்டுமே  கண்டுள்ளது. இதில் சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் தோனியின் கேப்டன்சி ஆகியவை கடும் விமர்சனத்துக்குள் ஆக்கியுள்ளன.

கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி இன்று வெற்றி பெற்று விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய கட்டாயத்தில் உள்ளது. இன்றைய போட்டியில், சென்னை அணியின் நட்சத்திர வீரர்கள் ராயுடு மற்றும் பிராவோ ஆகியோர் அணிக்கு திரும்புவது நிச்சயம் அந்த அணிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில், சிஎஸ்கே கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் சில மைல்கல்களை எட்டுவார் என கருதப்படுகிறது. இதுவரை ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் தோனி 298 சிக்ஸர்கள் அடித்துள்ள நிலையில் இன்னும் 2 சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில் மொத்தம் 300 சிக்ஸர் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன் ரோகித் சர்மா(368), ரெய்னா (311) ஆகியோர் மூன்றுக்கு அதிகமான சிக்ஸர்களை டி20 போட்டிகளில் அடித்துள்ளனர்.

அதே போல, தோனி தனது பழைய பார்முக்கு திரும்பி 8 சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில் ஐபிஎலில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள உள்ள டிவில்லியர்ஸை முந்தக்கூடும். மேலும், இன்றைய போட்டியில் தோனி 24 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், ஐபிஎல் தொடரில் 4500 அடித்த வீரர் என்ற மைல்கல்லை அவர் எட்டக்கூடும். இதற்கு முன்னர் ரெய்னா, கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஐபிஎல் தொடரில் 4,500 ரன்கள் அடித்துள்ளனர்.

இது மட்டுமில்லாமல், விக்கெட் கீப்பராக ஐபிஎல்லில் இதுவரை தோனி 98 கேட்ச்கள் பிடித்துள்ள நிலையில், இன்னும் இரண்டு கேட்ச்களை இன்றைய போட்டியில் செய்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் 100 கேட்ச்கள் பிடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெறலாம். முதலிடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் உள்ளார்.

ஏற்கனவே இன்றைய போட்டியில், சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், தோனி இதில் ஏதேனும் சில மைல்கல்களை எட்டினால் ரசிகர்கள் இன்னும் ஆரவாரத்தில் திளைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்