‘டீம் ஸ்பிரிட்’-ன்னா ‘இப்டி’ இருக்கணும்..!- “என் கோச் வரக்கூடாதுன்னா நாங்களும் வரமாட்டோம்..!”- ஏற்பாட்டாளர்களுக்கு ‘தல’ தோனி பதிலடி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

“என் அணியின் கோச்-க்கு அனுமதி இல்லை என்றால் நாங்கள் யாருமே அந்த நிகழ்ச்சி வரவில்லை” என கேப்டன் ஆக இருந்த போது தோனி எடுத்த முடிவு குறித்து பெருமையாகப் பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி க்ரிஸ்டன்.

Advertising
>
Advertising

எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி, கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்து முன்னணி சர்வதேச அணியாக உயர்ந்தது. தோனி ஒருபுறம் என்றால் பயிற்சியாளர் கேரி க்ரிஸ்டன் மறுபுறம் இந்திய அணியின் பல சாதனைகளுக்கும் பின்னால் நிற்பவர். தோனி- க்ரிஸ்டன் கூட்டணியில் இந்திய கிரிக்கெட் அணி பல மைல்கல் சாதனைகளைப் புரிந்தது.

இந்திய அணியின் 50 ஓவர் உலகக்கோப்பைக்குச் சொந்தக்காரர் ஆன ஒரே பயிற்சியாளர் கேரி க்ரிஸ்டன். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி உலகக்கோப்பையை மட்டுமல்லாது டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் முதன்முறையாக டாப் இடம் பிடித்தது. க்ரிஸ்டன் பயிற்சியின் கீழ் தான் இந்திய அணி கடந்த 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைப் படைத்தது. மொத்தத்தில் க்ரிஸ்டன் தலைமையிலான இந்திய அணி தான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டாப் இடத்தைக் கைப்பற்றியது என்றே சொல்லலாம். அப்போதைய கேப்டன் தோனி மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய அணியின் மரியாதையையும் பெற்ற க்ரிஸ்டனுக்கு இந்தியாவில் ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட அந்த நிகழ்ச்சியே இந்திய அணிக்குத் தேவையில்லை என ரத்து செய்துள்ளார் தோனி.

அந்த நிகழ்ச்சி குறித்து தற்போது யூட்யூப் சேனல் ஒன்றில் கேரி க்ரிஸ்டன் பேசியுள்ளார். க்ரிஸ்டன் கூறுகையில், “அந்த நாளை என் வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது. அப்போது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கும் காலம். கேப்டன் தோனி உட்பட இந்திய அணியினர் அத்தனை பேரும் பெங்களுரூவில் உள்ள விமானப் பயிற்சி பள்ளி ஒன்றில் நடக்க உள்ள நிகழ்ச்சிக்குப் போவதாக இருந்தது. எங்கள் நான் உட்பட 3 வெளிநாட்டவர்கள் இருந்தோம். நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த அணியும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தோம்.

நிகழ்ச்சிக்குக் கிளம்பும் முன்னர் காலையில் எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. அதாவது, நான், பேடி உப்டன் மற்றும் எரிக் சைமன்ஸ் உட்பட 3 தென் ஆப்பிரிக்கர்களும் விமானப் பள்ளி நிகழ்ச்சிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படக்கூடிய சூழல் இருப்பதாகக் காரணம் கூறப்பட்டது. அப்போது தோனி சொன்ன வார்த்தை என்னை நெகிழச் செய்துவிட்டது.

எம்.எஸ்.தோனி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து ஒட்டுமொத்த நிகழ்ச்சியையே ரத்து செய்வதாகக் கூறிவிட்டார். ‘இவர்கள் என் அணியினர். அவர்களுக்கு அனுமதி இல்லை என்றால் நாங்கள் யாரும் வரப்போவது இல்லை’ என தோனி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார். அதுதான் எம்.எஸ்.தோனி” எனப் பெருமையுடன் பேசியுள்ளார்.

க்ரிஸ்டன் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக 2007- 2011ம் ஆண்டு வரையில் பணியாற்றினார். 2011 இந்திய உலகக்கோப்பை வெற்றிக்குப் பின்னர் அணியில் இருந்து விலக பின்னர் ஃப்ளட்சர் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆனார்.

CRICKET, MS DHONI, GARY KRISTEN, TEAM INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்