என்னாச்சு ‘தல’க்கு..! இன்னைக்கு மேட்சல காயத்தோடுதான் விளையாடுவாரா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் போது தோனியின் கையில் காயம் ஏற்பட்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகக்கோப்பை லீக் சுற்றின் 40 -வது போட்டி இன்று(02.07.2019) பிர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிக்கொள்கின்றன. இந்திய அணியை பொறுத்தவரை இரண்டு முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. அதில், குல்தீப் யாதவிற்கு பதிலாக புவனேஷ்வர்குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த தினேஷ் கார்த்திக் அணியில் இணைந்துள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் கைவிரலில் காயம் ஏற்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் கடைசி 5 ஓவர்கள் தோனி மந்தமாக விளையாடியதாக பலரும் விமர்சனம் செய்தனர். அப்போட்டியில் தோனி 42 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பேட்டிங் செய்யும் போது தோனியின் கையின் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நீங்க சொதப்பிக்கிட்டே இருங்க'... 'இனிமேல் அவர் இறங்கட்டும்'... 'இந்திய அணியில்' அதிரடி மாற்றம்!
- விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘என்றும் தல தோணி’..
- 'தோல்விக்கு' இதான் காரணம்.. 'அப்படி எத சொன்னாங்க?'.. முன்னாள் முதல்வரின் வைரல் ட்வீட்!
- ‘உண்மையில் அவருக்குக் காயம்தானா..?’ முன்னாள் வீரரின் ட்வீட்டால் ரசிகர்கள் சந்தேகம்..
- ‘உங்கள் நேர்மை சோதிக்கப்பட்டது.. அதில் தோற்றுவிட்டீர்கள்..’ இந்திய அணியை மறைமுகமாகச் சாடியுள்ள முன்னாள் வீரர்..
- ‘நீங்க எல்லாரும் தான அவரு வேணுனு கேட்டீங்க..’ போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய வீரர்..
- அடுத்தடுத்த சோதனையில் சிக்கி தவிக்கும் இந்திய அணி..! காயத்தால் மீண்டும் ஒரு முக்கிய வீரர் விலகல்..!
- 'இது என்ன 'டெஸ்ட் மேட்ச்சா'?... 'நீங்க தோத்ததுக்கு இது தான் முக்கிய காரணம்'... மனம் திறந்த பிரபல வீரர்!
- 'பதுங்கி.. பாய்ந்து.. பறந்த' நொடிகள்.. மைதானத்தையே உறையவைத்த வீரரின் வைரல் கேட்ச்!
- உலகக் கோப்பை வரலாற்றில்.. ‘மிக மோசமான சாதனையைப் பதிவு செய்த இந்திய வீரர்..’