‘திருமணம் ஏன் அவசியமா?'... 'சென்னையில் தோனியின் அசத்தல் பேச்சு'... வைரலான வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாஷ்மீரில் ராணுவப் பயிற்சி மேற்கொள்வதற்கு முன்னர், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, திருமணத்தை பற்றி தோனி பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பையில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்த இந்திய வீரர் தோனி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து தானே விலகினார். இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் ஆக இருக்கும் தோனி, அடுத்த இரண்டு மாதங்கள், தான் இராணுவத்தில் பணிபுரிய உள்ளதாக கூறினார். இதற்கு இந்திய ராணுவம் அனுமதி அளித்ததையடுத்து, வரும் 31-ம் தேதி முதல், ஆகஸ்ட் 15-ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ குழுவினருடன் தோனி ரோந்து பணிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் நடந்த பூஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனி, திருமணத்தைப் பற்றி அசத்தலாகக் கூறிய வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. அதில், ‘கல்யாணம் ஏன் தேவை என்றால், நீங்கள் ஐம்பது வயதை தாண்டும் போது, அது தான் உண்மையான காதலுக்கான நேரம். உங்கள் குழந்தைகள் பள்ளி அல்லது கல்லூரிக்கு சென்று விடுவார்கள்.
அப்போது தான் உங்களுக்கான நேரம் கிடைக்கும்’ என்று குறிப்பிட்டார். ஏற்கனவே தோனி காஷ்மீரில் ராணுவப் பயிற்சியில் சேர்ந்துவிட்டதாக செய்திகள் வெளியானநிலையில், அவர் வரும் 31-ம் தேதி முதல்தான் முழுமையாக பயிற்சியில் ஈடுபட உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் மும்பை விமானநிலையத்தில் தோனி செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நல்லா ஆடினாலும், தொடர்ந்து வாய்ப்பு தரலனா’... 'அது நல்லது அல்ல'... 'இளம் வீரர் உருக்கம்'!
- ‘அவரால இரண்டு உலகக் கோப்பை போச்சு’... இப்டி மாத்துனா தான் சரியா வரும்’... 'முன்னாள் இந்திய வீரர் காட்டம்'!
- 'அப்படின்னா..'.. டக்குன்னு நான் செலக்ட் பண்றது இவராதான் இருப்பார்.. அப்புறம் இவங்கல்லாம்!
- செய்தியாளர்களை சந்திக்க மறுக்கும் வீரர்?... இதுதான் காரணமா?
- 'நள்ளிரவில் பரிதவித்த இளம்பெண்'... ‘காவலரு’க்கு குவியும் பாராட்டுக்கள்!
- ‘முக்கிய வீரருக்கு விசா மறுக்க கூறப்பட்ட காரணம்..’ களத்தில் இறங்கிய பிசிசிஐ..
- '1700' பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு?'...'சென்னை ஊழியர்களின் நிலை?'... பிரபல நிறுவனம் அதிரடி!
- 'ஏன்.. பண்ண மாட்டோமா? யாரா இருந்தாலும் இதான்.. '.. காவல்துறையின் ‘மெர்சல்’ ஆக்ஷன்!
- ‘இந்திய அணி பற்றிய பொறுப்பற்ற பேச்சால்..’ பதவியை இழக்கும் முன்னாள் வீரர்..
- ‘என்ன நடக்கிறது அணியில்..?’ இந்திய வீரரின் செயலால் வலுக்கும் சந்தேகம்..