சும்மா ‘கதை’ விடாதீங்க.. ஜாதவ் கிட்ட ‘ஸ்பார்க்’ இருக்கா? இல்ல சாவ்லா கிட்டதான் இருக்கா? ஏன் அந்த ‘வார்த்தையை’ சொன்னீங்க?.. விட்டு விளாசிய ‘மூத்த’ வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கான காரணமாக கூறிய தோனியின் கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 37-வது லீக் போட்டி நேற்று (19.10.2020) அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 125 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜடேஜா 35 ரன்கள் எடுத்திருந்தார். இதனை அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 126 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.

இந்தநிலையில் போட்டி முடிந்தபின் பேசிய தோனி, ‘இதற்கு முன்னதாக சில இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். ஆனால் அவர்களிடத்தில் ஸ்பார்க்கை பார்க்க முடியவில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு ஸ்பார்க் இல்லை. அதனால் மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன்.

ஆனால் தற்போது வந்துள்ள முடிவுகளின்படி பார்த்தால் அணியில் உள்ள இளைஞர்களுக்கு மீதமுள்ள போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். இப்போது இளைஞர்கள் மீது அணியில் எந்த பிரஷரும் இல்லை. இனிமேல் அவர்கள் மைதானத்திற்கு சென்று தங்கள் விருப்படி ஆட முடியும்’ என தோனி கூறினார். தோனி இந்த கருத்தை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தமிழருமான ஸ்ரீகாந்த், ‘தோனி சொன்னதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். ப்ராசஸ், ப்ராசஸ் என்று அவர் சொல்வதை ஒப்புக்கொள்ளவே முடியாது.தோனி சொல்லும் கதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. சும்மா கதை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

ப்ராசஸ் என்று சொல்லும் நீங்கள் செய்யும் அணி தேர்வே தவறு. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி கூறுகிறார். ஜெகதீசனிடம் ஸ்பார்க் இல்லையா? இவரிடம் இல்லாத ஸ்பார்க்தான் ஜாதவிடம் இருக்கிறதா?

ப்ராசஸ் என்று கூறி மொத்த தொடரும் முடிய போகிறது. இனிமே இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று தோனி கூறுகிறார். இனிமேல் இளைஞர்களுக்கு ஸ்பார்க் இருக்கிறதா என்று பார்ப்போம் என்று கூறி இருக்கிறார்.

ஆனால் இதற்கு முன்பே ஜெகதீசன் நன்றாகத்தான் விளையாடினார். இது எதுவும் எனக்கு புரியவில்லை. ஜெகதீசனிடம் இல்லாத ஸ்பார்க் ஜாதவிடம் இருக்கிறதா? இல்லை பியூஸ் சாவ்லாவிடம் இருக்கிறதா?’ என்று ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்ரீகாந்த்தை போல பலரும் தோனியின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அதற்கு காரணம் இளைஞர்களுக்கு சரியாக வாய்ப்பு கொடுக்காமல், அவர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று கூறுவது முழுக்க முழுக்க தவறு என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்