'2011 வேர்ல்டு கப் ஃபைனல்ல...' 'தோனி அடிச்ச சிக்ஸ்ல ball மிஸ்...' '9 வருஷமா தேடி கடைசியில...' - இப்போ அந்த பந்தால ஒரு செம குட் நியூஸ்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2011-ம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பைப் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். தோனி தலைமையில் இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி மும்பை வான்கடே அரங்கில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே இறுதி ஆட்டம் நடந்தது.
தோனி தன்னுடைய ஸ்டைலில் ஆட்டத்தை முடித்துவிட்டார். அருமையான சிக்ஸரைக் கூட்டத்தில் அடித்துள்ளார் என்று உரக்க ரவிசாஸ்திரி கூறினார். இலங்கை வீரர் குலசேகரா வீசிய பந்தில் கேப்டன் தோனி இமாலய சிக்ஸரை விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து, இந்திய அணிக்குக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்தார்.
அந்த ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகன் மனதில் என்றும் நினைவிருக்கும். ஆனால், அந்தப் போட்டியில் தோனி கடைசியில் அடித்த சிக்ஸர் அடித்த பந்து காணாமல் போனது.
இந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன அந்தப் பந்தைக் கண்டுபிடித்துத் தர முன்னாள் கேப்டன் சுனிஸ் கவாஸ்கர் மும்பை கிரிக்கெட் அமைப்புக்கு உதவ முன்வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வான்கடே அரங்கில் எந்தப் பகுதியில் பந்து விழுந்ததோ அந்தப் பகுதிக்கு தோனியின் பெயரை வைத்து, தோனியைக் கவுரவப்படுத்த மும்பை கிரிக்கெட் அமைப்பு முடிவு செய்துள்ளது.
அந்தப் பந்தை மும்பை கிரிக்கெட் அமைப்பு தேடி வந்த நிலையில், இறுதிப் போட்டியின்போது தோனி அடித்த பந்தை எடுத்துச் சென்ற பார்வையாளர் சுனிஸ் கவாஸ்கரின் நண்பர் ஆவார்.
பந்து விழுந்த இடம்
தோனி அடித்த பந்து விழுந்த இடம் எம்சிஏ பெவிலியனில் 210-ம் எண் இருக்கை. அந்தப் பந்தை எடுத்துச் சென்ற ரசிகரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். இதைத் தொடர்ந்து மும்பை கிரிக்கெட் அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர் அஜின்கயே நாயக், நிர்வாகக் குழுவுக்கு எழுதிய கடிதத்தில், வான்கடே மைதானத்தில் தோனியைப் பெருமைப்படுத்தும் விதமாக நிரந்தர இருக்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்து உள்ளார்கள்.
இந்த நிலையில் தோனி அடித்த பந்தை எடுத்துச் சென்ற பார்வையாளர் சுனில் கவாஸ்கரின் நண்பர் என்பதை மும்பை கிரிக்கெட் அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, கவாஸ்கரிடம் பேசி, அந்தப் பந்தைப் பெற்றுத் தருமாறு மும்பை கிரிக்கெட் அமைப்பு வேண்டுகோள் வைக்க உள்ளது.
ஏறக்குறைய 9 ஆண்டுகளாக தோனி அடித்த பந்து தேடப்பட்டு வந்த நிலையில், இப்போதுதான் அது இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தோனி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இரண்டாவது மேட்ச்சுல தோத்ததுக்கு... அவரு இல்லாததும் ஒரு காரணமா???" - CSK-வுக்கு வந்துள்ள புதிய சிக்கல்... எப்படி சமாளிக்கப்போகிறார், தோனி???
- "அவசரப்படாதீங்க... அவர் பேட்ட புடிச்சு பல நாள் ஆகுது.. பெஸ்ட்ட பாக்கணும்னா வெயிட் பண்ணுங்க!".. கேப்டனுக்கு ஆதரவாக களமிறங்கிய தலைமை பயிற்சியாளர்!
- 6 வருஷத்துக்கு முன்னாடியே போடப்பட்ட விதை !... 'சென்னை'யை காலி செய்து ரசிகர்களை கடுப்பாக்கிய இளம்வீரர்!
- என்ன ஒரு தைரியம்! 'இறங்கி' வந்த கொல்கத்தா கேப்டன்... மறைமுகமாக 'தோனியை' சீண்டும் ரசிகர்கள்!
- "எல்லா டீம்லேயும் அவர கூப்பிடறாங்க... ஆனா, இந்த டீம் மட்டும் அவர கண்டுக்கவே மாட்டேங்கறாங்க!"... - இளம் வீரருக்கு ஆதரவாக கோபத்தில் கொதிச்ச பிரபல வீரர்!!!
- CSK Vs RR ஆட்ட தோல்வி : "இத செஞ்சிருக்கலாம், அத செஞ்சிருக்கலாம்"... 'தோனியை துரத்தும் சர்ச்சைகள்'... 'தோல்விக்கான காரணத்தை போட்டுடைத்த கேப்டன்!!!
- "இதுதான் அணியை வழிநடத்துறதா? உடனே 3 சிக்ஸர் அடிச்சார்னு கொடி தூக்காதீங்க!".. 'தோனியை' கடுமையாக 'விமர்சித்த' வீரர்!.. என்ன காரணம்?
- கடைசி வரை இருந்தா... டீம் கண்டிப்பா 'தோத்துரும்'... 7 வருடங்களாக விடாமல் 'துரத்தும்' ராசி!
- அவுட் சர்ச்சை: திட்டி போஸ்ட் போட்டு... அவசர அவசரமாக 'டெலிட்' செய்த கேப்டன் மனைவி!
- அவ்ளோ தூரம் எடுத்து சொல்லியும்... தகர்ந்து போன சென்னையின் 'பிரம்மாஸ்திரம்'... ஆடிப்போன தோனி!