இது ‘பழைய’ தோனியே இல்ல.. எப்பவுமே பயப்படாத ‘தல’ ஏன் இந்த சீசன்ல மட்டும் ‘அத’ பண்ணல..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை அணியின் கேப்டன் தோனியின் ஆட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் போட்டி நேற்று (23.10.2020) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இப்போட்டியில் சென்னை அணியின் முதல் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அதனால் 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. அதன்பின்னர் களமிறங்கிய சாம் குர்ரன் இறுதி வரை சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்து சென்னை அணியின் மானத்தை காப்பாற்றினார்.

இதனை அடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் டி காக் 46 ரன்களும், இஷான் கிஷன் 68 ரன்களும் எடுத்து அசத்தினர்.

இந்நிலையில் சென்னை அணியின் தொடர் தோல்வி குறித்தும், கேப்டன் தோனியின் பேட்டிங் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘பல பேட்ஸ்மேன்கள் ஃபார்ம் அவுட்டாகி ரன்கள் சேர்க்க தடுமாறுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதிலிருந்து மீண்டுவர அதிரடியாக அடித்து ஆட வேண்டும். தோனியும் இந்த சீசனில் அவரது பழைய அதிரடி ஆட்டத்தை ஆடி இருக்க வேண்டும். பழைய தோனி எந்தவித பயமுமின்றி அடித்து நொறுக்கும் குணமுடையவர். அப்படித்தான் அவரது அணுகுமுறை இந்த சீசனில் இருந்திருக்க வேண்டும்’ என தெரிவித்தார். மேலும் சென்னை அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்