‘கேலி, கிண்டல், விமர்சனம்’!.. திடீர்னு ‘விஸ்வரூபம்’ கமல் மாதிரி சேஞ்ச் ஓவர் கொடுத்த சிஎஸ்கே.. அப்படியென்ன அட்வைஸ் கொடுத்தார் ‘தல’ தோனி..? CEO காசி விஸ்வநாதன் சொன்ன சீக்ரெட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே வீரர்களுக்கு தோனி கூறிய அறிவுரை குறித்து தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வரும் 14-வது சீசன் ஐபிஎல் (IPL 2021) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட தொடரில், இதுவரை 49 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 9-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கும் சிஎஸ்கே அணி தகுதி பெற்றுள்ளது.

ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த தொடர் முழுவதும் தொடர் தோல்விகளை சந்தித்தது. வெற்றி பெற வேண்டிய பல போட்டிகளில் சிஎஸ்கே வீரர்களின் மோசமான ஆட்டம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் அணியாக தொடரில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

ஐபிஎல் வரலாற்றில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சிஎஸ்கே அணி வெளியேறியது அதுதான் முதல்முறை. அதனால் சென்னை அணியை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதனால் சிஎஸ்கே நிர்வாகம் அணியில் பல மாற்றங்களை கொண்டு வந்தது. அதன்படி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேதர் ஜாதவை அணியில் இருந்து விடுவித்தது.

இதனிடையே கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடியபோது, கேப்டன் தோனியிடம் அணியின் ஆட்டம் குறித்து வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த அவர், இந்த ஒரு தொடர் எங்களுக்கு மோசமாக அமைந்துவிட்டது. அடுத்த ஆண்டு வலிமையுடன் திரும்பி வருவோம் என கூறியிருந்தார்.

தோனி கூறியது போலவே நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு சிஎஸ்கே வீரர்கள் தங்களது வேலையை திறம்பட செய்து வருகின்றனர். குறிப்பாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் சதம் அடித்து அசத்தியிருந்தார்.

இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் திடீர் கம்பேக் குறித்து அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே அணி வீரர்களுடன் கேப்டன் தோனி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கடந்த ஐபிஎல் தொடர் நமக்கு மோசமாக அமைந்துவிட்டது. அதற்காக கவலை அடையாதீர்கள். அனைத்து ஆண்டும் அதுபோல் நடைபெறாது. நிச்சயம் இதிலிருந்து நம்மால் மீண்டு வர முடியும்’ என அணி வீரர்களுக்கு தோனி ஊக்கம் அளித்ததாக காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறிய சிஎஸ்கே, நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணிகாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று சிறப்பான கம்பேக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று (04.10.2021) டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு (DC) அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்