‘குடும்பத்துடன் சிம்லாவில் ஜாலி டூர்’!.. கிளம்பும்போது மரப்பலகையில் தோனி எழுதிய அந்த வாசகம்.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி குடும்பத்துடன் சிம்லாவுக்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் வீரர்கள் அனைவரும் வீடு திரும்பினர். தற்போது எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. வரும் செப்டம்பர் 3-வது வாரத்தில் இருந்து போட்டிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்திய வீரர்களுள் ஒரு அணியினர் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகின்றனர். இளம்வீரர்களை கொண்ட மற்றொரு அணி இலங்கை சுற்றுப்பயணத்துக்கு தயாராகி வருகிறது. ஆனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தோனி தனது குடும்பத்தினருடன் ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவிற்கு ஜாலி டூர் சென்றுள்ளார். அம்மாநிலத்தில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு குடும்பத்தினருடன் தோனி நேரத்தை செலவிட்டு வருகிறார். மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அப்போது அவர் தங்கியிருந்த வில்லாவில் இருந்து கிளம்பும்போது மரப்பலகை ஒன்றில், ‘மரம் வளர்ப்போம், காடுகளை பாதுகாப்போம்’ என தோனி எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்