கடந்த 10 வருஷத்துல உங்களுக்கு புடிச்ச கேப்டன் யாரு..? ரசிகர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த 10 வருடங்களில் சிறந்த கேப்டன் யார் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் எழுப்பிய கேள்விக்கு ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடருக்குப்பின் தோனி இந்திய அணியில் இடம்பெறவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களிலும் தோனியின் பெயர் இல்லை. களத்தில் தோனியை காணாமல் அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு வந்து 15 வருடங்களை தோனி நிறைவு செய்தார். இதனை அவரது ரசிகர்கள் #15YearsOfDhonism என்ற ஹேஸ்டேக்கை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் கடந்த 10 வருடங்களில் சிறந்த கேப்டன் யார் என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தது. ட்விட்டரில் போட்டதுதான் தாமதம், உடனே தோனியின் ரசிகர்கள், தோனிதான் சிறந்த கேப்டன் என மளமளவென படையெடுக்க ஆரம்பித்தனர்.
கடந்த 2017-ம் ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். ஒருநாள், டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று கோப்பைகளையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பாராட்டிய கங்குலி... நன்றி தெரிவித்த அஸ்வின்... ட்வீட்டிய அஸ்வின் மனைவி!
- பஞ்சாப் வீரர்களின் 'சம்பள' விவரம் ... புது 'கேப்டனோட' சம்பளம் எவ்ளோன்னு பாருங்க!
- ‘இந்த ஒருநாள் டீமுக்கு நம்ம தோனிதான் கேப்டன்’..! வெளியான ‘வெறித்தனமான’ லிஸ்ட்..!
- வாழ்த்துக்கள்! 'கேப்டன்' கூல்... ‘தல’ தோனிக்கு பாராட்டு தெரிவித்த... 'தமிழக' அமைச்சர்!
- ‘உலகக்கோப்பையில அந்த கடைசி 30 நிமிஷத்த மட்டும் தவிர்த்திட்டு பார்த்தா’!.. மனம் திறந்த கேப்டன் கோலி..!
- மீண்டும் அணிக்கு திரும்பிய... 2 முக்கிய வீரர்கள்... இலங்கை, ஆஸ்தி. தொடருக்கான... இந்திய அணி வீரர்களின் முழு விபரம்!
- இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில்... ஸ்டார் பிளேயருக்கு ஓய்வு?... விவரம் உள்ளே!
- ‘#15YearsOfDhonism'.. 6 அடி உயர ‘தோனி கேக்’!.. மாஸ் காட்டிய பேக்கரி..!
- நீங்க ரொம்ப ‘அதிர்ஷ்டசாலி’... ‘உருவத்தை’ கேலி செய்த முன்னாள் வீரருக்கு... ‘பதிலடி’ கொடுத்த ‘ஆர்சிபி’ வீரரின் வைரல் ட்வீட்...
- ஐபிஎல் 'ஏலத்தில்'... விலைபோகாத 'நோட்புக்' வீரர்... என்ன காரணம்?