அடுத்த ஐபிஎல் சீசன்ல ‘கேப்டன்சி’ கை மாறுதா? இது என்னடா புது ‘ட்விஸ்ட்’.. குண்டை தூக்கிப்போட்ட முன்னாள் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் விலகிவிடுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக தோனி இருந்து வருகிறார். இவர் தலைமையிலான சென்னை அணி 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 6 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு பெரும் சோதனை காலமாக அமைந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் சென்னை அணி வெளியேறியது. இதனால் ஐபிஎல் தொடரிலிருந்து தோனி ஓய்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தோனியிடமே வர்ணனையாளர் கேட்டபோது நிச்சயமாக இல்லை, அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் விளையாடுவேன் என்று தோனி தெரிவித்தார்.
இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டு நடைபெறும் 14-வது ஐபிஎல் சீசனில், சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை டுபிளிசிஸிடம் தோனி ஒப்படைக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘எனக்குக் கிடைத்த தகவல்களின்படி 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிவிடலாம். அந்தப் பொறுப்பை டுபிளிசிஸிடம் தோனி ஒப்படைப்பார் என தெரிகிறது. தோனி அணியில் சாதாரண வீரராக, விக்கெட் கீப்பராக இருந்து செயல்படுவார். கேப்டன் பொறுப்பில் ஒரு மாற்றம் தேவை என்பதற்காகவே தோனி இதை செய்யலாம்.
இப்போதுள்ள சூழ்நிலையில் சிஎஸ்கே அணியில் கேப்டன் பொறுப்பு மாற்றத்துக்கு வேறு வீரர் யாருமில்லை. சிஎஸ்கே அணியைத் தவிர்த்து மற்ற அணியைப் பார்த்தால், ஏலத்தில் எந்த முக்கிய வீரரையும் அணிகள் இழக்கத் தயாராக இல்லை. கேப்டன் தகுதியுள்ள எந்த வீரரையும் மற்ற அணிகள் விடுவிக்கத் தயாராக இல்லை. அதனால் டுபிளிசிஸிடம் கேப்டன் பொறுப்பை தோனி ஒப்படைக்கலாம்.
எனக்குத் தெரிந்தவரை 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபின், கேப்டன் பொறுப்பை வேறு வீரரிடம் தோனி ஒப்படைக்க எண்ணினார். அது தொடர்பாக அவர் பிசிசிஐ நிர்வாகிகளிடம் பேசினார். ஆனால், அந்த நேரத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியத் தொடர்கள் இருந்தது. அப்போது அணியை வழிநடத்த தகுதியான வீரர்கள் இல்லாத காரணத்தினால் கேப்டன் பதவியில் தோனி தொடர்ந்து நீடித்தார்’ என சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தப்பிக்கவே முடியாது’... ‘கல்யாண நாளில்’... ‘தமிழக வீரர் அஸ்வின் மனைவி பகிர்ந்த போட்டோ’... லைக்ஸ்களை அள்ளும் ட்வீட்...!!!
- 'வாய்க்கு வந்தத ஒலராதீங்க!'.. 'பிளேயர்ஸ் இன்ஜுரி பத்தி 'இவங்களுக்கு' புரிதலே இல்ல!'.. மௌனம் கலைத்து... கடும் கோபத்தில்... கொந்தளித்த கங்குலி!
- 'இன்னொரு ஐபிஎல் டீம்-ஆ?'.. 'இவங்களுக்குத் தான் கொடுக்கணும்!'.. வலுக்கும் சிபாரிசுகள்!.. அவசர அவசரமாக வேலை செய்யும் கங்குலி!.. கடும் போட்டி... யாருக்கு ஜாக்பாட்?
- 'இன்ஸ்டாகிராமில ஒரு போட்டோ போட்டது குத்தமா?.. வளைச்சு வளைச்சு புடிக்கிறாங்களே!'.. அதிகாரிகள் பல நாள் திட்டம்!.. சிக்கிய க்ருணால் பாண்டியா!.. பரபரப்பு தகவல்!
- ‘தோனி, கங்குலியின் கலவை தான் இவரு’... ‘அந்த ரெண்டு கேப்டன்களின் திறமையும்’... ‘அப்டியே இவர்கிட்ட இருக்கு’... ‘புகழ்ந்து தள்ளிய முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர்’...!!!
- ஸ்கிரீன்ல மட்டும் போட்டி இல்ல... 'ஐபிஎல்'லயும் தான்!.. ஷாருக் கானுக்கு டஃப் கொடுக்க... 9-வது அணியை வாங்க துடிக்கும் பிரபல 'பாலிவுட்' நடிகர்!.. கடும் போட்டியில்... வெல்லப்போவது யார்?
- ஐபிஎல் கப் ஜெயிச்ச கையோட ‘மும்பை இந்தியன்ஸ்’ டிரஸ் போட்டே ‘பாகிஸ்தானுக்கு’ விளையாட போன வீரர்.. வைரலாகும் போட்டோ..!
- 'இப்டி எல்லாம் செய்யலாமா’...??? ‘ரவி சாஸ்திரி பதிவிட்ட ட்வீட்டால்’... ‘வெடித்துள்ள சர்ச்சை’... ‘வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’... ‘பழைய பகைதான் காரணமா’????
- 'ஆஹா... 'இது'க்குள்ள இவ்ளோ 'அர்த்தம்' ஒளிஞ்சிருக்கா!'.. அன்றே சொன்ன தல தோனி!.. சிஎஸ்கே-வின் அதிரடி திட்டம்... வீரர்கள் ஷாக்!.. என்ன நடந்தது?
- அப்போ தோனி எடுத்த ‘முடிவை’ ஏன் கோலி எடுக்கல? டீம் மேல அவருக்கு அக்கறை இல்லையா?.. ‘கம்பேர்’ பண்ணி தாக்கும் ரசிகர்கள்..!