எகிறிய டென்சன்... நடுவரிடம் 'சூடாக' வாக்குவாதம் செய்த கேப்டன்... ஏன் இப்படி? என்ன ஆச்சு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சார்ஜாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 216 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி தற்போது விளையாடி வருகிறது.

ராஜஸ்தான் அணியின் துல்லிய பந்துவீச்சு சென்னை அணியை பதம்பார்த்து வருகிறது. இதனால் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து லேசாக தடுமாறி வருகிறது. இந்த நிலையில் சென்னை அணியின் கூல் கேப்டன் என புகழப்படும் தோனி களத்தில் அம்பயருடன் வாக்குவாதம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சாஹர் வீசிய 18-வது ஓவரில் ராஜஸ்தான் வீரர் டாம் கரண் பேட்டிங் செய்தார். சாஹர் வீசிய பந்தை தோனி கேட்ச் பிடித்தார். பந்து டாமின் பேட்டில் பட்டது போல தெரிந்தது இதனால் நடுவர் விக்கெட் கொடுத்தார். ஆனால் டாம் இது விக்கெட் இல்லை என கூறினார். எனினும் ரிவியூ மீதம் இல்லாததால் அவர் வெளியேறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அப்போது, அங்கிருந்த பெரிய ஸ்கிரீனில் ரீபிளே காட்டப்பட்டது. அதில் பந்து தரையில் பட்டு பின்னர் பிடிப்பது தெரிய வந்தது. இதையடுத்து தோனியின் கேட்சை ரிவ்யூ செய்ய நடுவர்கள் முயன்றனர். இதைப்பார்த்த தோனி தனது கேட்ச் குறித்து, நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ரீபிளே பார்த்த பின்னர் ரிவியூ முடிவு எடுக்கப்பட்டதாக வாதாடினார்.

ஆனால் நடுவர்கள் மீண்டும் ரீபிளே செய்து பார்த்தனர். தொடர்ந்து 3-வது நடுவர் டாம் கரண் அவுட் இல்லை என தீர்ப்பு அளித்தார். இதையடுத்து டாம் மீண்டும் உள்ளே வந்து விளையாடினார். எனினும் தோனியின் கோபம் குறையவில்லை. அவர் அம்பயரிடம் வாதாடியதை பார்த்த ரசிகர்கள் தோனியா இது? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்