இந்த வருஷம் 'சிஎஸ்கே' கொடுத்த தரமான 'கம்பேக்'.. "அதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா??.." தோனி பகிர்ந்த 'சுவாரஸ்ய' தகவல்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்றிருந்த போட்டியில், சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றிருந்தது.

கடந்த சீசனில் அதிக தடுமாற்றத்துடன் ஆடிய சிஎஸ்கே (CSK), பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல், வெளியேறியதால், அதிக விமர்சனங்களை சந்தித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே, 5 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

போன சீசனில் படு சொதப்பலாக ஆடிய சென்னை அணி, இந்த முறை மொத்தமாக உருமாறி, கோப்பையை கைப்பற்றும் நோக்கில் ஆடி வருகிறது. இந்நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டிக்குப் பின் பேசிய சென்னை கேப்டன் தோனி (Dhoni), 'எங்களது அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் மிகவும் அற்புதமாக உள்ளது. டெல்லி பிட்ச், நாங்கள் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இருந்தது.

கடந்த சீசனுக்கும், இந்த சீசனுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம் என்னவெனில், கடந்த முறை அணியில் உள்ள தவறுகளைக் கண்டுபிடித்து, சரி செய்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், இந்த முறை அதனை எளிதில் அறிந்து கொண்டு சரி செய்தோம். அது மட்டுமில்லாமல், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பான 5 - 6 மாதங்களில், யாரும் கிரிக்கெட் ஆடவேயில்லை.

எதற்கும் அனுமதி இல்லாமல், தனிமைப்படுத்தப்பட்டிருந்தோம். இப்படி ஏகப்பட்ட காரணங்கள் கடந்த சீசனில் இருந்தன. இவை தான் எங்களுக்கு சவாலாக அமைந்தது. இந்த வருடம், அணியில் இருக்கும் வீரர்கள், அதிகம் பொறுப்போடு ஆடுகிறார்கள். கடந்த 8 முதல் 10 ஆண்டுகளில், நாங்கள் அணி வீரர்களில் பெரிய மாற்றங்களை செய்வதில்லை. அதே வேளையில், அணியில் வாய்ப்பு கிடைக்காமல், பெஞ்சில் இருக்கும் வீரர்களையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக்கூறி, நம்பிக்கை வைக்கவும் அறிவுறுத்தியுள்ளோம். அணியில் வாய்ப்பு கிடைக்காத வீரர்கள், எப்போதும் அதற்கு தயாராக இருக்க வேண்டும். டிரெஸ்ஸிங் ரூம் சூழ்நிலையை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.


அது அத்தனை எளிதான காரியம் ஒன்றுமில்லை. விளையாடாத வீரர்களுக்கும் சேர்த்து, எங்களது வெற்றிக்கான பாராட்டுக்களைத் தெரிவிப்போம். இதனால் தான் எங்களது அணி ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு வருகிறது' என தோனி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்