‘ஜெயிச்சாலும், தோல்வி அடைஞ்சாலும்’... ‘ஐபிஎல் போட்டியில் இவங்க தான் மாஸ்’... ‘ரசிகர்களை அதிகம் கவர்ந்த அணி எது தெரியுமா?’...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐக்கிய அமீரகத்தில் நடந்த ஐபிஎல் போட்டி 13-வது சீசனில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த அணி எது என்பது தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் பெண் ரசிகைகள் அதிகம் இந் தஇரண்டு வீரர்களுக்குத் தான் அதிகம்.
ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் ஐபிஎல் போட்டி நடந்த 8 வார்ங்களில் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. 23 மாநிலங்களில் 3,200 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஐபிஎல்லின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் என்பது அறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வில் 26.8 மில்லியன் ரசிகர்களை பெற்று சிஎஸ்கே முதலிடத்தில் உள்ளது. மிக குறைவான புள்ளிகளை எடுத்திருந்தாலும் சிஎஸ்கே அணி எடுத்திருந்தாலும், அதனால் அதனது ரசிகர்கள் வட்டம் பாதிக்கவில்லை. அதை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் குறைந்த வித்தியாசத்தில் அதாவது 24.8 மில்லியன் ரசிகர்களுடன் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. மூன்றாவது இடத்தில் 13.3 மில்லியன் ரசிகர்களுடன் ஆர்சிபி உள்ளது.
இந்த மூன்று அணிகளும் சேர்ந்து 75 சதவிகித ஐபிஎல் ரசிகர்களை பெற்றுள்ளது. மற்ற 5 அணிகள் இணைந்து மீதமுள்ள 25 சதவிகித ரசிகர்களை பெற்றுள்ளது. மேலும் ஐபிஎல்லில் 64 சதவிகித ஆண்களும், 36 சதவிகித பெண்களும் ரசிகர்களாக உள்ளதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தோனி மற்றும் விராட் கோலிக்கு அதிகமான பெண் ரசிகைகள் உள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனாலேயே அந்த அணிகள் அதிகளவில் ரசிகர்களை தக்க வைத்துக்கொண்டுள்ளது. மேலும் ஆண் ரசிகர்களை மட்டுமே வைத்து பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் சிஎஸ்கே முந்தி காணப்படுகிறது. ஆனால் பெண் ரசிகைகளால் சிஎஸ்கே அதிக ரசிகர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.
இதுகுறித்து ஆர்மேக்ஸ் மீடியாவின் நிறுவனர் மற்றும் சிஇஓ சைலேஷ் கபூர் கூறுகையில், சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி மூன்று அணிகளும் கடந்த 13 ஆண்டுகளில் தங்களது ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பார்வையாளர்களைத் தவிர, உறுதியான வெற்றியின் நடவடிக்கை மூலம், ஐபிஎல் அணிகள் தங்களது கணிசமான ரசிகர்களை தக்க வைக்க முடியுமா என்பதுதான்.
அப்படி உருவாக்கிவிட்டால், அதன்மூலம், லாபகரமான அணியாக உருவெடுக்க முடிவதற்கான வாய்ப்புகளை தருகிறது என்று கூறியுள்ளார். இவர்களை பார்த்து தங்களது ரசிகர்கள் வட்டத்தை உயர்த்திக் கொள்ள மற்ற அணிகள் திட்டமிட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அடுத்த சீசனிலேயே வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்???'... 'ஒன்று சேர்ந்து கேட்கும் அணிகள்?!!'... 'எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள தகவல்!!!'...
- "அந்த எடம் எப்போவும் தோனிக்கு தான்... யாரும் அத தொட முடியாது!!!"... 'ஜாம்பவான் சொன்ன லிஸ்ட்'... 'மிஸ்ஸான முக்கிய வீரர்?!!'...
- ‘கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்கள்’... 'ஐசிசி விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட இந்திய வீரர்கள்’... ‘இவர் மட்டும் எல்லாப் பிரிவிலும் நாமினேட்’...!!!
- 'மத்த டீம்ல Familyகே அனுமதி இல்லாதப்போ'... 'BCCIஐ மிரள செய்த அணி!!!'... 'லிஸ்ட்டுலயே இதுதான் உச்சகட்டம்!!!'... 'தொடருக்குப்பின் கசிந்த தகவல்!'...
- அப்போ 'அது' கன்ஃபார்ம் தானா...? 'போடுறா வெடிய...' - 'வேற லெவல்' கொண்டாட்டத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்...!
- ‘ஹிட்மேன் ரோகித் சர்மாவிற்கு பதிலாக’... ‘டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக’... ‘ இந்த இளம் வீரருக்கு’... ‘அடிக்கப்போகும் சான்ஸ்’???...
- 'இதுக்கெல்லாம் பின்னாடி இத்தன பிளானிங்கா?!!'... 'கங்குலி எடுத்த அந்த ஒரு முடிவு!!!'... 'அடுத்தடுத்த அதிரடிகளால் வருமானத்தை குவித்து மலைக்க வைத்துள்ள BCCI!!!'...
- ‘இரண்டு சீனியர் வீரர்களும்’... ‘டெஸ்ட் தொடரில் பங்கேற்க போவதில்லை?’... ‘வெளியான தகவல்’...!!!
- ‘இந்திய அணி நிர்வாகம்’... ‘எந்த ஆர்டரில் இறக்கினாலும் சரி’... ‘பேட்டிங் செய்ய தயார்’... ‘அதிரடியாக கூறிய சீனியர் வீரர்’...!!!
- ‘அவருக்கு ஏன் இந்திய அணியில் இடம் கொடுக்கல’... ‘கண்டிப்பா அவர சேர்த்து இருக்கணும்’... ‘மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு’... ‘கிரிக்கெட் ஜாம்பவான் ஆதரவு’