'ஐசிசி' விருதுகள் அறிவிப்பு... 'தோனி'க்கு கிடைத்த மிகப்பெரிய 'கவுரவம்'!!!... 'முக்கிய' விருதை தட்டிச் சென்ற 'இளம்' வீரர்!!... முழு விவரம் உள்ளே!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2011 முதல் 2020 பத்து ஆண்டுகளில் சிறந்த வீரர்களுக்கான விருதுகளை ஐசிசி தற்போது அறிவித்துள்ளது. இதற்கான ஓட்டெடுப்பு வேலைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியிருந்த நிலையில், இதன் முடிவுகளை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஐசிசி விருதுகளில் இரண்டு முக்கிய விருதுகளை கைப்பற்றியுள்ளார். பத்தாண்டுகளுக்கான சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதும் கோலிக்கு கிடைத்தது.


 

சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் வென்றுள்ளார். கோலி, அஸ்வின் ஆகிய வீரர்களை வீழ்த்தி ஸ்மித் இந்த விருதை தட்டிச் சென்றுள்ளார்.




அதே போல, சிறந்த டி 20 வீரருக்கான விருதை ரோஹித் ஷர்மா கைப்பற்றுவார் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ரஷித் கான் தட்டிச் சென்றார். நீண்ட காலமாக டி 20 போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அவர் முதலிடத்தில் உள்ளார்.

 

ஐசிசி முன்னதாக அறிவித்திருந்த பத்து ஆண்டுகளுக்கான டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக இடம்பெற்றிருந்த எம்.எஸ். தோனிக்கு மிக முக்கியமான விருது ஒன்றை ஐசிசி வழங்கி கவுரவித்துள்ளது. 'ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்' (Spirit of Cricket) என்ற விருதை தோனிக்கு வழங்கியுள்ளது.



கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் இயான் பெல் தவறான தீர்ப்பால் ரன் அவுட்டாகியிருந்த நிலையில் அவரை மீண்டும் ஆட அழைத்திருப்பார் தோனி. அவரின் அத்தகைய செயலுக்காக இந்த விருதினை ஐசிசி அளித்துள்ளது.

 

மகளிர் பிரிவில் சிறந்த டி 20 வீராங்கனை, சிறந்த ஒரு நாள் போட்டி மற்றும் சிறந்த டெஸ்ட் வீராங்கனை என மூன்று விருதுகளையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆல் ரவுண்டர் எல்லி பெர்ரி அள்ளிச் சென்றுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்