தோனியை விட ஜடேஜாவை அதிக விலைக்கு தக்க வைக்க காரணம் இதுதானா..? உத்தப்பா சொன்ன சீக்ரெட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை விட ஆல்ரவுண்டர் ஜடேஜாவை முதல் வீரராக தக்கவைத்து குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. அதில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே தங்களது அணியில் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் கேப்டன் தோனி, ஆல்ரவுண்டர்களான ஜடேஜா, மொயின் அலி மற்றும் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் சிஎஸ்கே அணி முதல் வீரராக ஜடேஜாவுக்கு 16 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது. அவரை தொடர்ந்து கேப்டன் தோனிக்கு 12 கோடி ரூபாயும், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு 8 கோடி ரூபாயும், இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்க்கு 6 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது.

கேப்டன் தோனியை விடவும் ஜடேஜாவுக்கு அதிக விலை கொடுக்கப்பட்டது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முன்னதாக தோனி முதல் வீரராக தக்கவைக்கப்படுவார் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறியிருந்தது. அப்போது தன்னை அதிக விலைக்கு தக்கவைக்க வேண்டாம் என்றும் அந்த பணத்தை மற்ற வீரர்களை எடுப்பதற்காக செலவழிக்கலாம் என்று தோனி கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஜடேஜா முதல் வீரராக தக்கவைக்கப்பட்டது குறித்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘உறுதியாக சொல்கிறேன் தோனி சரியாகதான் செய்துள்ளார். ஜடேஜாவின் தேவை என்ன என்பது தோனிக்கு நன்றாக தெரியும். எனக்கு தெரிந்த அளவிற்கு சிஎஸ்கே அணியை தோனிக்கு பிறகு ஜடேஜாதான் வழி நடத்துவார் என்று தெரிகிறது. அதனால்தான் முதல் வீரராக அவர் தக்க வைக்கப்பட்டுள்ளார்’ என உத்தப்பா கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ஜடேஜா, அனைத்து வகையான கிரிக்கெட் பார்மெட்டுகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 6-வது வீரராக களமிறங்கி அற்புதமாக விளையாடுகிறார். அனைத்து போட்டிகளிலும் தனது பொறுப்பை உணர்ந்து அவர் விளையாடி வருகிறார். அதனால் சிஎஸ்கே அணிக்கு தோனிக்கு பிறகு ஜடேஜா கேப்டனாக வர அதிக வாய்ப்புள்ளது’ என உத்தப்பா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்