நான் பாத்ததிலேயே ‘தோனி’ தாங்க ரொம்ப ஷார்ப்பான ப்ளேயர்.. இவர் கிட்ட இருந்து இப்படியொரு பாராட்டா..! குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் புகழ்ந்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்தியாவுக்காக 3 வகையான உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் ஆவார். அதேபோல் கடந்த 2010-ம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவை நம்பர் 1 டெஸ்ட் அணியாக கொண்டு வந்தவர். அபாரமான கேப்டன்ஷிப், பினிஷிங், ஸ்டம்பிங் என பல பரிணாமங்களை கொண்ட தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வீரர்.

இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் 90-களில் உலக கிரிக்கெட்டை மிரட்டும் அணிகளாக வலம் வந்தன. 2015-ம் ஆண்டுக்கு பின் அந்த அணியில் இடம்பெற்ற வீரர்கள் ஓய்வு பெற்றபின், அவர்களுக்கு நிகரான வீரர்களை கண்டறிய முடியாமல் இன்றும் அந்த அணிகள் தவித்து வருகின்றன.

ஆனால் கேப்டனாக ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற தோனி, ஒரு கட்டத்திற்குப்பின் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளித்தார். இதனால் மூத்த வீரர்களை தோனி புறக்கணிப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தபோதிலும் தனது முடிவில் உறுதியாக இருந்தார். அதனால் தற்போது விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மற்ற கேப்டன்களை போல அல்லாமல் எப்போதும் வித்தியாசமாக சிந்தித்து யாரும் எதிர்பார்க்காத முடிவுகளை எடுப்பதில் தோனி வல்லவர். குறிப்பாக 2007 -ம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை ஹர்பஜன் சிங்கிற்கு வழங்க வேண்டும் என பலரும் கூறினர். ஆனால், முந்தைய ஓவர்களில் ரன்களை வாரி வழங்கிய ஜோகிந்தர் சர்மாவிடம் கொடுத்தார். அதன் பயன், இந்தியா தனது முதல் டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

அதேபோல் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில், யாரும் யோசிக்காத வகையில் பேட்ஸ்மேனுக்கு நேராக பவுண்டரி எல்லையில் ஒரு பீல்டரை நிற்கவைத்தார். சொல்லி வைத்தார் போல் பொல்லார்டு அந்த பீல்டரிடம் கேட்ச் கொடுத்த அவுட்டாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இப்படி பல ஆச்சரியங்களை தோனி நிகழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான கிரேக் சேப்பல், தோனியை பாராட்டி பேசியுள்ளார். அதில், ‘இந்தியாவில் நான் வேலை செய்த போது, தனக்கு தானே பாடங்களை கற்றுக் கொண்டு தனக்குத்தானே திறமைகளை வளர்த்து கொண்ட ஒரு வீரருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக தோனி இருந்தார்.

அவரது ஆரம்ப கட்டத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் தன்னை விட அனுபவம் கொண்டவர்களிடம் போட்டி போட்டார். முடிவுகளை எடுப்பதிலும், யுத்திகளை கையாள்வதிலும் தோனிக்கும் இருக்கும் திறமை, மற்றவர்களிடமிருந்து அவரை தனித்து காட்டுகிறது. நான் பார்த்ததில்லையே தோனிதான் மிகவும் கூர்மையான மூளையை கொண்டவர்’ என கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.

MSDHONI, GREGCHAPPELL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்