VIDEO: 'மகள்களை' விட 'அப்பாக்களின்' வெற்றிகளைக் கொண்டாடுவோர் 'யாரும்' உண்டா...? 'தோனி அடித்த மாஸ் சிக்ஸ்...' 'துள்ளி குதித்த மகள் ஷிவா...' - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் டி-20 நேற்றைய (30-09-3031) போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு விர்திமான் சஹா 44 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் பெரிதாக ரன் எடுக்காமல் விக்கெட் ஆயினர். கடைசியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை எட்டிப்பிடிக்க சிங்கமென சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. முதல் இரண்டு ஓவர்கள் பந்துவீச்சை கவனித்துவிட்டு, மூன்றாவது ஓவரில் இருந்து பந்தை கிழிக்க தொடங்கிவிட்டனர். ருதுராஜ் (45 ரன்கள்) மற்றும் டூபிளசிஸ் (41 ரன்கள்) உடன் வெளியேறினர்.

வெற்றிக்கு தேவையான 70% ரன்களை ஓப்பனிங் வீரர்களே அடித்துக் கொடுத்தாலும், திடீரென சிஸ்கே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சென்னை ரசிகர்களின் தலையில் இடியை இறக்கியது. 15 ஓவரில் வெற்றி பெற்றுவிடும் என்று நினைத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 3 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரில் இரண்டு பந்துகளை தோனி வீணடித்தபோது சென்னை ரசிகர்கள் தலையில் துண்டைப் போட்டுவிட்டு அமர்ந்து விட்டனர், கடைசி ஓவரின் 4 பந்தில் தனது ஸ்டைலில் ஒரு மாஸ் சிக்ஸர் அடித்து சென்னை அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 9-வது வெற்றியை பதிவு செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதன் மூலம் ப்ளே ஆஃப் செல்லும் முதல் அணியாக சென்னை அணி உள்ளது.

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றியை சமூக வலைதளங்களில் சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றியைவிட, தோனி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து கொடுத்ததே ரசிகர்களால் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

 

தோனி சிக்ஸர் அடித்தபோது போட்டியைக் கண்டுக்கொண்டிருந்த தோனியின் மனைவி மற்றும் மகள் உற்சாகமடைந்தனர். தந்தையின் வெற்றியை மகள் கொண்டாடியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்