மத்த டீம் ப்ளேயர்ஸ் ‘தல’ T-Shirt-அ வாங்குனாங்க ஓகே.. ஏன் ஜடேஜாவும் வாங்குனாரு? அப்போ அது ‘உண்மை’ தானா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் இளம்வீரர்கள் டி-ஷர்ட்டை பரிசாக வாங்கியது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் ராஜாவாக வலம் வந்த சென்னை அணிக்கு இந்த வருடம் மோசமாக தொடராக அமைந்தது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பையிடம் பெற்ற வெற்றிக்கு பின் தொடர் தோல்விகளை சந்தித்தது. பல போட்டிகளில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. முதல் முறையாக ப்ளே ஆஃப் செல்லாமல் லீக் சுற்றிலேயே சென்னை அணி வெளியேறியது.

சென்னை அணியின் மோசமான ஆட்டத்துக்கு அணியில் உள்ள வயதான வீரர்களே காரணம் என்றும் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் பலரும் விமர்சனம் செய்தனர். அதேபோல் சில போட்டிகளில் இளம்வீரர்களுக்கு தோனி வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அப்போட்டிகளில் அவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இதனால் இளம்வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என தோனியே வெளிப்படையாக தெரிவித்தார். இது சர்ச்சையை கிளப்பியது.

இந்தநிலையில் பெங்களூரு, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடியது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனை அடுத்து அவரை தோனி பாராட்டி பேசினார். அதேபோல் சென்னை அணியின் இளம்வீரரான சாம் குர்ரனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதனால் அடுத்த சீசனில் வயதான வீரர்களை அணியில் இருந்து விலக்கி விட்டு இளம்வீரர்களை எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ருதுராஜ், சாம் குர்ரன் போன்ற வீரர்களை பேட்டி ஒன்றில் தோனி பாராட்டி பேசியுள்ளார்.

இந்தநிலையில் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னும் மற்ற அணி வீரர்கள் தோனியின் ஆட்டோகிராஃப் இட்ட டி-ஷர்ட்டை பரிசாக வாங்கி செல்கின்றனர். முதலில் பட்லர், அடுத்து ஹர்திக் பாண்ட்யா, குர்ணல் பாண்ட்யா போன்ற வீரர்கள் வாங்கினார்கள்.

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பின் கொல்கத்தா அணி வீரர்களான நிதிஷ் ரானா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் தோனியின் டி-ஷர்ட்டை வாங்கினர். அப்போது சிஎஸ்கே வீரர் ஜடேஜாவும் தோனியின் டி-ஷர்ட்டில் ஆட்டோகிராஃப் வாங்கினார்.

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டார். இது தோனியின் ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதால் சற்று ஆறுதல் அடைந்தனர். இந்தநிலையில் இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தோனியிடம் வீரர்கள் டி-ஷர்ட்டை பரிசாக பெற்று வருகின்றனர். அதில் ஜடேஜாவும் தோனியின் டி-ஷர்ட்டை வாங்கியதால், ஒருவேளை இந்த ஐபிஎல் சீசனுடன் தோனி ஓய்வு பெற போகிறாரா? என ரசிகர்கள் சோகமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்த சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், தோனி அடுத்த ஆண்டு சென்னை அணியை கேப்டனாக இருந்து வழி நடத்துவார் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்