ஏதோ லக்'ல ரன் அடிச்ச தோனி??.. அப்போ ரோஹித் விஷயத்துல உனத்கட் செஞ்சது என்ன.? உண்மையை தோண்டிய தோனி ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொண்ட போட்டியில், கடைசி ஓவரில் பினிஷிங் பணியை அசத்தலாக செய்திருந்தார் தோனி.

Advertising
>
Advertising

கடந்த சில ஐபிஎல் சீசன்களில், பெரிய அளவில் ரன் அடிக்காமல் திணறி வந்த தோனி, இந்த முறை நல்ல ஃபார்மில் உள்ளார்.

மும்பை அணிக்கு எதிராக கடைசி ஓவரில், 16 ரன்கள் அடித்த தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டாவது வெற்றிக்கு உதவி செய்திருந்தார்.

ஏதோ ஒரு Luck தான்..

மும்பை வீரர் உனத்கட் வீசிய கடைசி ஓவரில், இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 16 ரன்களை எடுத்து சென்னை அணி வெற்றி பெற உதவி இருந்தார் தோனி. இணையம் முழுக்க தோனியின் புகழ் பாடி வரும் நிலையில், 'Vintage' தோனி திரும்ப வந்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், இன்னொரு பக்கம் தோனியின் பேட்டிங் ஒரு Fluke மூலம் நிகழ்ந்தது தான் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

அதாவது, உனத்கட் ஓவர் என்பதால் தான், தோனியால் எளிதாக 16 ரன்களை 4 பந்துகளில் அடிக்க முடிந்தது. வேறு யாராவது பந்து வீசி இருந்தால், நிச்சயம் அவரால் சென்னை அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்க முடியாது என்றும் தெரிவித்து வருகின்றனர்.

2017'ல உனத்கட் செய்த சம்பவம்

இந்நிலையில், அப்படி  குறிப்பிட்டு வரும் ரசிகர்களுக்கு தோனியின் ரசிகர்கள் அசத்தலான பதிலடியை கொடுத்து வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி இருந்தது. இதில், புனே அணியில் தோனி மற்றும் உனத்கட் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அப்போது, இரண்டாவதாக பேட்டிங் செய்த மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்தில், களத்தில் ரோஹித் மற்றும் ஹர்திக் பாண்டியா இருந்தனர். அப்படி ஒரு வேளையில், இந்த ஓவரை வீசிய உனத்கட், 13 ரன்கள் கொடுத்து, ரோஹித் மற்றும் ஹர்திக் ஆகியோரின் விக்கெட்டையும் எடுத்திருந்தார்.

ரசல் கூட அடிக்கல..

இதனால், புனே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் உதவி இருப்பார் உனத்கட். அதே உனத்கட் ஓவரில் தான் தோனி 16 ரன்களை எடுத்தார். ரோஹித், ஹர்திக் பாண்டியா ஆகியோர், அன்று இதே உனத்கட் ஓவரில் ஏன் 17 ரன்களை அடிக்கவில்லை என குறிப்பிட்டு வருகின்றனர். இன்னொரு  உதாரணமாக, இன்று (23.04.2022), குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், அதிரடி வீரர் ரசல் இருக்க, கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால், அந்த அணியால் 9 ரன்கள் மட்டும் அடிக்க முடிந்தது. ரோஹித், ரசல் போன்ற வீரர்கள் நிகழ்த்த முடியாததை தோனி நிகழ்த்திக் காட்டியுள்ளார் என்றும், பவுலர்கள் யார் என்பதை விட, தோனி தனது பங்கினை சிறப்பாக செய்துள்ளார் என்றும், ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் இது நிகழவில்லை என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு….
https://www.behindwoods.com/bgm8/

MSDHONI, ROHIT SHARMA, UNADKAT, CSK VS MI, IPL 2022, உனத்கட், ரோஹித், தோனி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்