‘எனக்காக வீணா பணத்தை செலவு பண்ண வேண்டாம்’!.. திடீரென குண்டை தூக்கிப்போட்ட தோனி.. அப்படின்னா அடுத்த வருசம்..? சிஎஸ்கே உரிமையாளர் சொன்ன ‘முக்கிய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, தன்னை அடுத்த ஐபிஎல் தொடரில் தக்க வைக்க வேண்டாம் எனக் கூறியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

ஐபிஎல் (IPL) தொடரில் இதுவரை 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்த சூழலில் அடுத்த ஆண்டு முதல் 2 புதிய அணிகள் இணைக்கப்பட உள்ளதாக பிசிசிஐ (BCCI) அறிவித்தது. அதன்படி சில தினங்களுக்கு முன்பு இந்த இரு அணிகளுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை மையமாகக் கொண்டு ஒரு அணியும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவை மையமாகக் கொண்டு மற்றொரு அணியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் அடுத்த ஆண்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. இதன்காரணமாக அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட உள்ளனர். இதில் சிஎஸ்கே (CSK) அணியின் கேப்டன் தோனி (Dhoni), மீண்டும் அந்த அணிக்காக விளையாடுவாரா என்று சந்தேகம் எழுந்தது.

தற்போது தோனிக்கு 40 வயது ஆவதால், இன்னும் சில ஆண்டுகளில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்று கூறப்படுகிறது. அதனால் நீண்ட காலத்துக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ள வீரர்களை அணி நிர்வாகம் தக்க வைக்கும் என கருதப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், அடுத்த ஆண்டு நிச்சயம் தோனியை தக்க வைப்போம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், அதிக விலை கொடுத்து தன்னை தக்க வைக்க வேண்டாம் என சிஎஸ்கே அணி நிர்வாகத்திடன் தோனி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து Editorji ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன் (Srinivasan) விளக்கமளித்துள்ளார்.

அதில், ‘தோனி ஒரு நேர்மையான மனிதர். அவர் தன்னை அதிக விலை கொடுத்து தக்க வைக்க வேண்டாம், சிஎஸ்கேவுக்கு தான் நஷ்டம் என கூறினார். ஆனால் நாங்கள் அவரை நிச்சயம் தக்க வைப்போம். நான் ஏற்கனவே கூறியபடி தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. அவர்தான் எங்கள் அணியின் முதல் தேர்வு. ஆனால் தோனிபோல் மற்ற வீரர்களுக்கு இதே சலுகை கொடுக்க முடியாது. ஆலோசனையில் என்ன முடிவு எடுக்கப்படுகிறோ, அவர்கள் மட்டும்தான் தக்கவைக்கப்படுவார்கள். அதனால் கடினமான சில முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும்’ என சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்