“நான் ஒன்னு நெனச்சு வந்தேன்... ஆனா தோனி அப்டியே ஆப்போசிட்டா..” டு பிளிசிஸ் என்ன சொல்றாரு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியில் இணைந்துபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளசிஸ் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26-ம் தேதி முதல் மே 29-ஆம் தேதி நடைபெறுகிறது. மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் போட்டிகள் நடைபெறுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதனிடையே சில அணிகள் தங்களின் புதிய கேப்டன் மற்றும் புதிய ஜெர்ஸி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய கேப்டன் மற்றும் ஜெர்ஸி பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் பெங்களூரு அணியை வழிநடத்தும் புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் வீரர் டு ப்ளசிஸ் அறிவிக்கப்பட்டார். மேலும் புதிய ஜெர்சியும் வெளியிடப்பட்டது.
இதற்கு முன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டு ப்ளசிஸ் விளையாடி வந்தார். அப்போது கேப்டன் தோனியிடம் கற்றது குறித்து அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய, ‘சென்னை அணியில் முதல் முறையாக எனது பயணத்தை தொடங்கிய போது கேப்டன்ஷிப் எப்படி இருக்கும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அப்போது ஒரு கேப்டனாக எப்படி இருக்க வேண்டும் என நான் நினைத்தேனோ, அதற்கு அப்படியே நேர்மாறாக தோனி இருந்தார். ஏனென்றால் தென் ஆப்பிரிக்க கலாச்சாரத்தை சேர்ந்த நான் முதல் முறையாக இந்திய சூழ்நிலையில் நுழையும்போது, நான் நினைத்ததற்கு அப்படியே நேர்மாறாக இவர் உள்ளாரே என எனக்கு தோன்றியது.
பொதுவாக கேப்டன்ஷிப் செய்வதில் நிறைய ஸ்டைல்கள் உள்ளது. ஆனால் எப்போதுமே நாம் நமக்கென்று ஒரு ஸ்டைலில் அணியை வழிநடத்த வேண்டும். அதுதான் கடினமான சூழ்நிலையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கும். அதனால் நான் விராட் கோலியாக இருக்க விரும்ப மாட்டேன். ஏனென்றால் நான் விராட்கோலி கிடையாது. அதேபோல் நான் தோனி போலவும் அணியை வழிநடத்த மாட்டேன். ஆனால் சிஎஸ்கே அணியில் விளையாடிய போது, நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு அனுபவம் பெற்றுள்ளேன். அந்த பயணத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்’ என டு பிளசிஸ் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நம்ம சப்போர்ட் 'சிஎஸ்கே'வுக்கு தான்.." மீண்டும் நிரூபித்த ரெய்னா.. எல்லா வதந்தியும் சுக்கு நூறு ஆயிடுச்சு..
- ”சூரத்தில் பிராக்டிஸ்".. அட்டகாசமான புது லுக்கில் தல தோனியின் வைரல் புகைப்படம்..
- சிஎஸ்கே இன்ஸ்டா பதிவில்.. சுரேஷ் ரெய்னா போட்ட கமெண்ட்.. "அவரு என்னைக்குமே சின்ன தல தான்யா.." நெகிழ்ந்து போன ரசிகர்கள்
- இந்த ஒரு விஷயத்தை தோனி கிட்ட இருந்து கத்துக்கோங்க ரோகித்.. காட்டமாக அட்வைஸ் செய்த கோலியின் சிறுவயது கோச்..!
- "'Retired' ஆன அன்னைக்கி தோனி சொன்ன விஷயம்.." 'சிஎஸ்கே' வீரர் வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'சீக்ரெட்'
- சிஎஸ்கேவுக்கு காத்திருக்கும் தலைவலி?.. தோனி என்ன செய்ய போறாரு?.. குழப்பத்தில் ரசிகர்கள்
- "பாப் டு பிளஸ்ஸிஸ் நமக்கு வேணும்.." 'CSK' கிட்ட இருந்து பிரிக்க, 'RCB' போட்ட மாஸ்டர் பிளான்?
- "இன்னும் நம்பவே முடியல.." சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ.. ரெய்னாவை நினைத்து மனம் உருகிய ரசிகர்கள்
- "எனக்காக மும்பையும் (MI) சென்னையும் (CSK) சண்டை போட்டது தான் என் வாழ்க்கைல BEST MOMENT!" - இளம் வீரரின் வைரல் பேச்சு
- சிஎஸ்கே போட்ட பதிவு.. 'Smiley' மூலம் கமெண்ட் செய்த 'டு பிளஸ்ஸிஸ்'.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த 'சம்பவம்'