VIDEO: இதுல யார் மேல தப்புன்னு தெரியலயே.. பிராவோவை கோபமாக திட்டிய தோனி.. அப்படி என்ன நடந்தது..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஆல்ரவுண்டர் பிராவோவிடம் கோபப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் (IPL) தொடரின் 30-ல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (CSK), மும்பை இந்தியன்ஸ் அணியும் (MI) மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 88 ரன்கள் (9 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார். அதேபோல் 8-வது வீரராக களமிறங்கிய ஆல்ரவுண்டர் பிராவோ 8 பந்துகளில் 23 ரன்கள் (3 சிக்சர்) எடுத்தார்.

இதனை அடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டி காக் 17 ரன்களிலும், அன்மோல்பிரீத் சிங் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன்னிலும், இஷான் கிஷன் 11 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

இந்த சமயத்தில் களமிறங்கிய சௌரவ் திவாரி (Saurabh Tiwary) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் இவரது விக்கெட் சிஎஸ்கே அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் போட்டியின் 18-வது ஓவரை தீபக் சஹார் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை சௌரப் தீவாரி எதிர்கொண்டார். ஆனால் பந்து எதிர்பாராத விதமாக கேட்சானது.

அதனை விக்கெட் கீப்பர் தோனி வேகமாக ஓடி பிடிக்க சென்றார். அப்போது எதிர் திசையில் பிராவோவும் ஓடி வந்தார். இருவரும் மோதுவது போல் வந்ததால், தோனி அந்த கேட்ச்சை தவறவிட்டார். இதனால் கோபமான தோனி, பிராவோவை முறைத்து ஏதோ சொல்லி திட்டினார். உடனே பிராவோவும் ஏதோ சொல்லிவிட்டு அமைதியாக அங்கிருந்து சென்றார்.

இதனை அடுத்து மும்பை அணி தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்கள் முடிவில், 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இதில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்