'we miss you தல'... "அடுத்த மாசம் நாம களத்துல சந்திப்போம்"... ஒய்வு பெற்ற 'தோனி'க்கு... உருக்கமான 'பதிவு'களை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் 'வீரர்கள்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக திடீரென நேற்று தனது அறிவிப்பை வெளியிட்டார்.

தோனியின் இந்த ஒய்வு அறிவிப்பை யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தோனியின் ஒய்வு முடிவை தொடர்ந்து, வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது ஒய்வு முடிவை அறிவித்தார். இது மேலும் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், தோனியின் ஓய்வு முடிவுக்கு இந்திய அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பலர் தோனியின் ஆளுமை குறித்து தங்களது கருத்துகளையும், வாழ்த்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, சேவாக் ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவிட்டிருந்த நிலையில், தற்போதைய இந்திய கிரிக்கெட் வீரர்களும் தோனியின் ஒய்வு குறித்து பதிவிட்டுள்ளனர்.

விராட் கோலி, 'அனைத்து கிரிக்கெட் வீரர்களும் என்றாவது ஒரு நாள் தங்களது பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தும் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஒய்வு முடிவை அறிவிக்கும் போது, அதிகம் உணர்ச்சிவசப்படுவோம். நீங்கள் நாட்டுக்காக செய்த சாதனைகள், ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்கும்' என உருக்கமாக தோணியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். 

 
 

 

ஹர்திக் பாண்டியா, 'எம்.எஸ். தோனி ஒருத்தர் மட்டும் தான். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னுதாரணமாக திகழ்ததற்கு நன்றிகள். உங்களுடன் நீல ஜெர்சி அணிந்து கொண்டு விளையாடுவதை நிச்சயம் மிஸ் செய்வேன்' என பதிவிட்டிருந்தார். 

 

 

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா, 'இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு வீரர் தோனி. ஒரு சிறந்த அணியை கட்டமைப்பதில் மாஸ்டர் இவர். நீல நிற ஜெர்சியில் நீங்கள் ஆடுவதை நாங்கள் கண்டிப்பா மிஸ் செய்கிறோம். ஆனால் மஞ்சள் ஜெர்சியில் உங்களை பார்க்க ஆவலாக உள்ளோம். அடுத்த மாதம் 19 ஆம் தேதி டாஸ் போடும் போது சந்திப்போம்' என குறிப்பிட்டிருந்தார். 

 

 

 

பல கிரிக்கெட் வீரர்களும் தோனியின் ஒய்வு முடிவுக்கு உருக்கமான பதிவுகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்