IPL-க்கு நடுவே ரிலாக்ஸ்… தோனியோடு சேர்ந்து CSK ப்ளேயர்ஸ் வீடியோ கேம்… வைரல் pic!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேர்ந்து வீடியோ கேம் விளையாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | திருமண நிகழ்ச்சியில் கேட்ட துப்பாக்கி சத்தம்.. வேகமாக அறைக்குள் சென்ற மர்ம நபர்??.. கண்ணீர் விட்ட குடும்பம்

ஐபிஎல் தொடரில் சி எஸ் கே…

இதுவரை நடந்துள்ள 14 ஐபிஎல் சீசன்களில் 12 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது. அந்த தொடர்களில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வந்துள்ளது. அதற்கு அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் ஒரு காரணமாக இருந்து வந்தார். அந்த அணி விளையாடிய 12 சீசன்களிலும் அவரே கேப்டனாக செயல்பட்டார். இதுவரை 4 முறை கோப்பையை சிஎஸ்கே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் அணிக்குள் ஒரு வீரராக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

தோனியின் அதிர்ச்சி முடிவு…

தோனியின் இந்த முடிவு ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக அமைந்தது. இதன் பிறகு சி எஸ் கே அணிக்கு கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பதவியை விட்டு விலகியுள்ளதால் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்குமோ என்ற சந்தேகங்களும் எழுந்தன. ஆனால் அதை மறுத்துள்ள சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன் ”தோனி தொடர்ந்து விளையாடுவார்” என்று கூறியுள்ளார்.

தொடர்தோல்வி…

இந்நிலையில் புதுத்தலைமையில் விளையாடிவரும் சி எஸ் கே அணி மிக மோசமாக விளையாடி வருகிறது. ஆனால் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 ல் மட்டுமே வெற்றி உள்ளது. இதனால்  ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பு மங்கலாக உள்ளது. இனிமேல் வரும் அனைத்துப் போட்டிகளையும் வென்றாக வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது.

வைரல் புகைப்படம்

இந்நிலையில் தற்போது FIFA வீடியோ கேம் விளையாடியுள்ளனர் சி எஸ் கே வீரர்கள்.  இது சம்மந்தமான புகைப்படத்தை இணையத்தில் சி எஸ் கே அணி நிர்வாகம் பகிர, அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் தோனி, மொயின் அலி உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, MS DHONI, CSK, CSK PLAYER, FIFA MATCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்