"அடுத்த சீசன்'ல ஆடுவீங்களா??.." கடைசி போட்டியில் எழுந்த கேள்வி.. வைரலாகும் தோனி சொன்ன பதில்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த சீசனில் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சீசனில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

Advertising
>
Advertising

இதுவரை, 13 போட்டிகள் ஆடியுள்ள சிஎஸ்கே, அதில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று, பிளே ஆப் வாய்ப்பையும் இழந்துள்ளது.

இதனையடுத்து, தங்களுடைய கடைசி லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே மோதி வருகிறது.

பிளே ஆப் வாய்ப்பு யாருக்கு?

இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸின் போது, தோனி சொன்ன விஷயம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள், கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், கொல்கத்தா, பஞ்சாப், ஹைதராபாத், மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகள் பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.

ராஜஸ்தான் அணி சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தாலும், நல்ல ரன் ரேட்டை வைத்திருந்தாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம். மறுபக்கம், மும்பை மற்றும் டெல்லி அணிக்கு இடையேயான போட்டிக்கு பின்னர், டெல்லி அல்லது பெங்களூர் அணிகளில் ஒன்று, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

அடுத்த சீசன்'ல ஆடுவீங்களா?

அப்படி ஒரு சூழ்நிலையில், இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதனிடையே, டாஸின் போது, அடுத்த ஐபிஎல் சீசனில் தான் ஆடுவது பற்றி, முக்கியமான கருத்து ஒன்றை தோனி பகிர்ந்துள்ளார். கடந்த சில சீசன்களாகவே, தோனி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஆடுவாரா என்ற கேள்வி இருந்து வருகிறது. கடந்த சீசனின் போது, சென்னையில் வைத்து தனது கடைசி ஐபிஎல் தொடரை ஆடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

கொரோனா தொற்றின் காரணமாக, மும்பையை சுற்றியுள்ள பகுதிகளில் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருவதால், சென்னையில் ஆட முடியாத சூழல் உருவானது. இதனிடைய, தோனி இந்த சீசனோடு விலகி விடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. நடப்பு சீசனில், இன்று தங்களின் கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே மோதியதால், தோனி நிச்சயம் பதில் தெரிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அப்படி பண்ணா நல்ல இருக்காது

அதற்கேற்ப, டாஸ் சமயத்தில் பேசிய தோனி, "நிச்சயம் அடுத்த ஆண்டு ஆடுவேன். சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது அநியாயம் என்பதால், நான் ஆடுவேன். சிஎஸ்கே ரசிகர்களுக்கு அப்படி செய்வது நன்றாக இருக்காது" என குறிப்பிட்டுள்ளார். இதனால், நிச்சயம் அடுத்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி ஐபிஎல் தொடரில் ஆடுவதை குறி வைத்துள்ளார் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

MSDHONI, CHENNAI-SUPER-KINGS, CSK, CSK FANS, IPL 2022, DEFINITELY, சிஎஸ்கே, தோனி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்