‘MI டீம் மேல அப்படி என்ன கோவம்’.. வேறலெவல் சம்பவம் பண்ணிய தவான்.. ரெய்னாவின் சாதனை முறியடிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஷிகர் தவான், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | “ஜெயிக்கிற நேரத்துல தேவையில்லாம அப்படி செஞ்சிருக்க கூடாது”.. சீனியர் வீரரை மறைமுகமாக சாடிய ரோகித்..!

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 70 ரன்களும், கேப்டன் மயங்க் அகர்வால் 52 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. இதில் பஞ்சாப் அணியை பொறுத்தவரை ஓடியன் ஸ்மித் 4 விக்கெட்டுகளும், ரபாடா 2 விக்கெட்டுகளும் வைபவ் அரோரா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் 70 ரன்கள் எடுத்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் 871 ரன்கள் (27 இன்னிங்ஸ்) எடுத்த வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 850 ரன்கள் (36 இன்னிங்ஸ்) இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார்.

அதேபோல் ஐபிஎல் தொடரில் அதிக பவுண்டரி மற்றும் சிக்சர் (803) அடித்த வீரர் பட்டியலிலும் ஷிகர் தவான் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (768) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | காயத்தால் தீபக் சஹாருக்கு வந்த சோதனை.. பறிபோகும் மிகப்பெரிய வாய்ப்பு? கசிந்த தகவல்..!

CRICKET, IPL, SHIKHAR DHAWAN, MUMBAI INDIANS, MI, SURESH RAINA, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்