VIDEO: ‘அய்யோ..!’.. செம ஃபீலான ஷிகர் தவான்.. இவர் விக்கெட்டுக்கு மட்டும் ‘ஏன்’ இவ்ளோ முக்கியத்துவம் தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு உடல்நிலை சரியில்லாததால் மயங்க் அகர்வால் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்க் கொண்டார்.

இந்த நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 99 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 17.4 ஓவர்களில் 167 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 69 ரன்களும், ப்ரீத்வி ஷா 39 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிலையில் ஷிகர் தவான் கொடுத்த ரியாக்‌ஷன் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 10-வது ஓவரை டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட பஞ்சாப் அணி வீரர் டேவிட் மாலனின் காலில் பந்து பட்டுச் சென்றது. உடனே டெல்லி அணியினர் அம்பயரின் எல்பிடபுள்யூ கேட்டனர். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை.

இதனால் 3-வது அம்பயரிடம் டெல்லி அணி ரிவியூ கேட்டது. அப்போது அம்பயர்ஸ் கால் என வந்ததால், அம்பயர் நாட் அவுட் என தெரிவித்தார். இதனைப் பார்த்தவும், ‘ஐய்யோ’ என்பதுபோல நெஞ்சைப் பிடித்து ஷிகர் தவான் பீல் செய்தார். அதற்கு காரணம் டேவிட் மாலனது விக்கெட் டெல்லி அணி மிக முக்கியமாக பார்க்கப்பட்டது.

ஏனென்றால் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான டேவிட் மாலன், சர்வதேச டி20 கிரிக்கெட் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இதுவரை 24 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 10 அரைசதமும், 1 சதமும் அடித்துள்ளார். ஆனாலும் மீண்டும் அக்சர் படேல் வீசிய 14-வது ஓவரில் டேவிட் மாலன் 26 ரன்களில் அவுட்டாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்