IPL ப்ளே ஆஃப்-ல செலக்ட் ஆகாம வீட்டுக்கு வந்த தவானுக்கு ‘நாக் அவுட்’ விட்ட அப்பா.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஷிகர் தவானை அவரது தந்தை குறும்பாக அடித்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | உலகத்தின் குறைவான உயரம் கொண்ட இளைஞர்.. இவருக்கு இவ்ளோ வயசா..? கின்னஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது சீசன் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இதனை அடுத்து நாளை (27.05.2022) நடைபெற உள்ள ப்ளே ஆஃப் சுற்றில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘நாக்-அவுட் சுற்றில் தகுதி பெறாததால் என் அப்பாவால் நான் நாக் அவுட் செய்யப்பட்டேன்’ என பதிவிட்டு, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாதற்காக தனது தந்தை தன்னை குறும்பாக அடித்ததாக வீடியோ ஒன்றை ஷிகர் தவான் வெளியிட்டுள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்துள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஷிகர் தவானை ரூ. 8.25 கோடிக்கு எடுத்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 453 ரன்களை எடுத்து அசத்தினார். மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்தது. இன்னும் ஒரு ஆட்டத்தில் நல்ல ரன் ரேட் உடன் வெற்றி பெற்றிருந்தால் பஞ்சாப் அணி பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | வெள்ளியங்கிரி மலையேறிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.. திடீரென மயங்கி விழுந்து நேர்ந்த சோகம்..!

 

DHAWAN, PBKS, PUNJAB KINGS, SHIKHAR DHAWAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்