T20 போட்டி "பறந்தது எல்லாம் சிக்ஸ், ஃபோர் தான்".. 150+ அடிச்சு கலக்கிய "குட்டி ஏபிடி".. "Gayle ரெக்கார்டு காலி".. மிரண்ட ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகுட்டி ஏபிடி என வர்ணிக்கப்படும் தென் ஆப்பிரிக்க இளம் வீரர் டெவால்டு ப்ரேவிஸ், டி 20 தொடர் ஒன்றில் சதமடித்து பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி உள்ளார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை மூலம் அதிக கவனம் ஈர்த்தவர் தென் ஆப்பிரிக்க இளம் வீரர் டெவால்டு ப்ரேவிஸ். Mr 360 என அழைக்கப்படும் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் போல ப்ரேவிஸ் ஆடுவதால், "குட்டி ஏபிடி" என்ற பெயரும் வந்தது.
இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி இருந்த ப்ரேவிஸ், சில சிறப்பான இன்னிங்ஸ்கள் மூலம் கிரிக்கெட் உலகில் அதிக கவனம் ஈர்த்திருந்தார்.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் டி 20 தொடர் ஒன்றில் 150 ரன்கள் அடித்த ப்ரேவிஸ், கெயில் உள்ளிட்ட பலரின் சாதனைகளையும் முறியடித்துள்ளார். CSA T20 சேலஞ்ச் தற்போது தென் ஆப்பிரிக்காவில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் Titans மற்றும் Knights ஆகிய அணிகள் மோதி இருந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த Titans அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய Knights அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், 41 ரன்கள் வித்தியாசத்தில் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தது.
டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி இருந்த ப்ரேவிஸ், 57 பந்துகளில் 162 ரன்கள் (13 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள்) சேர்த்து பட்டையைக் கிளப்பி உள்ளார். இதன் மூலம், டி 20 போட்டியில் அதிக ரன் அடித்த தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் என்ற பெருமையை ப்ரேவிஸ் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு பீட்டர் மலான் மற்றும் டி காக் ஆகியோர் 140 ரன்கள் அடித்ததே தென் ஆப்பிரிக்க வீரரின் தனிநபர் அதிகபட்சமாக டி 20 போட்டியில் இருந்தது. அதே போல, 52 பந்துகளில் 150 ரன்களை ப்ரேவிஸ் தொட்டிருந்த நிலையில், குறைந்த பந்துகளில் 150 ரன்களை டி 20 போட்டிகளில் தொட்ட க்றிஸ் கெயிலின் சாதனையையும் (53 பந்துகளில்) முறியடித்துள்ளார்.
இது தவிர இன்னும் பல சாதனைகளை ஒரே போட்டியில் முறியடித்து காண்பித்துள்ளார் குட்டி ஏபிடி டெவால்டு ப்ரேவிஸ். 19 வயதாகும் ப்ரேவிஸ் இப்படி ஒரு மகத்தான சாதனையை டி 20 தொடரில் படைத்துள்ளதால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
ஒரே இடத்தில் கூடிய 178 பேர்.. எல்லாரோட பெயர்ல இருந்த Common விஷயம்.. "கின்னஸ் சாதனையே படைச்சுடுச்சு"
தொடர்புடைய செய்திகள்
- T10 : போடு வெடிய.. கிறிஸ் கெய்ல் & ‘நான் ஈ’ சுதீப் அறிவித்த டி10 நட்சத்திர கிரிக்கெட் போட்டி.. எங்க? எப்போ? முழு விபரம்
- ”அவங்களுக்கு நான் தேவை… இந்த Teams-காக Cup அடிக்கணும்”… ஐபிஎல் ரி எண்ட்ரி பற்றி கிறிஸ் கெய்ல் update!
- “எனக்கு முன்னாடியே பொல்லார்டு ஓய்வு பெறுவார்னு நெனக்கவே இல்ல”.. கிரிக்கெட் ஜாம்பவான் டுவிட்டரில் உருக்கம்..!
- ‘மேட்ச்ச மாத்துன அந்த ஒரு ஓவர்’…’கிரவுண்ட்டுக்கு ஓடி வந்த ரோஹித் ஷர்மா’ – குட்டி டிவில்லியர்ஸின் ’தெறி’ இன்னிங்ஸ்
- "எனக்கு ஒண்ணுமே விளங்கல.." நல்லா விளையாண்டும் நோ சொன்ன இந்திய அணி.. கடுப்பான 'பிரபல' வீரர்..
- IPL 2022: இந்த சீசனில் ரசிகர்கள் மிஸ் செய்யப்போகும் 5 விஷயங்கள்!
- காத்தோட உன் வாசம்.. ஊரெல்லாம் உன் பாசம்.. கண்ணே நீ திரும்பி வரணும் எங்களுக்கு.. கிறிஸ் கெய்லுக்கு ஆசைப்பட்ட 2 அணிகள்!
- பாஸ், என்னென்னமோ சொல்றாங்களே...! 'அதெல்லாம்' உண்மையா...? 'ஐயோ, நாங்க நம்ப மாட்டோம்...' - விளக்கம் அளித்த கெய்ல்...!
- இனி 'வாய' தொறந்தா மரியாதை இருக்காது...! உங்க மேல 'அன்பு' வச்சது என் தப்பு தான்...! 'எனக்கும் பேச தெரியும்...' - 'முன்னாள் வீரரை' விளாசி தள்ளிய கெயில்...!
- "இன்னும் எத்தனை நாளைக்கு தான் அவருக்கே 'சான்ஸ்' குடுப்பீங்க??.." 'சட்டு புட்டு'ன்னு நல்ல முடிவா எடுங்க.." 'பஞ்சாப்' அணியின் முடிவால் கடுப்பான 'முன்னாள்' வீரர்!!