"ஒண்ணா சேர்ந்து 'சூப்பரா' ஆடிட்டு இருந்தோம்.. திடீர்ன்னு 'மேக்ஸ்வெல்'லுக்கு என் மேல 'கோபம்' வந்துடுச்சு.." போட்டிக்கு நடுவே நடந்தது என்ன??.. மனம் திறந்த 'டிவில்லயர்ஸ்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி, 14 ஆவது ஐபிஎல் சீசனை மிகவும் சிறப்பாக தொடங்கியுள்ளது.
இதுவரை தாங்கள் ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள பெங்களூர் அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இதனிடையே, நேற்று கொல்கத்தா அணிக்கு நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 204 ரன்கள் எடுத்து அசத்தியது. இந்த போட்டியில், பெங்களூர் அணி வீரர்களான மேக்ஸ்வெல் (Maxwell) மற்றும் டிவில்லியர்ஸ் (Devilliers) ஆகியோர் நாலாபுறமும் பந்துகளை பவுண்டரிக்கு விளாசினர்.
மேக்ஸ்வெல் 78 ரன்களும், டிவில்லியர்ஸ் 76 ரன்களும் எடுத்திருந்த நிலையில், கடின இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியால் 166 ரன்களே எடுக்க முடிந்தது. தொடர்ந்து பெங்களூர் அணி வெற்றி பெற்ற நிலையில், டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
போட்டிக்கு பிறகு பேசிய டிவில்லயர்ஸ், 'மேக்ஸ்வெல்லுடன் இணைந்து ஆடியது, நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. நாங்கள் இருவரும், ஒரே மாதிரியான ஆற்றலை உடையவர்கள். நான் பேட்டிங் ஆட உள்ளே வந்ததும், இருவரும் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. அதனை சிறப்பாக செய்தும் காட்டினோம்' என்றார்.
மேலும், தன்னுடன் இணைந்து ஆடிய போது, ஒரு விஷயத்திற்காக தன்னிடம் மேக்ஸ்வெல் கோபப்பட்டது பற்றிப் பேசிய டிவில்லியர்ஸ், 'நான் பேட்டிங் ஆட வந்த போது, மேக்ஸ்வெல் மிகவும் சோர்வாக இருப்பதை நான் உணர்ந்தேன். அவர் என்னிடம் வந்து, "தன்னால் அதிகமாக ஓட முடியாது" என்று கூறினார். ஆனால், நான் ஆரம்பத்திலேயே 2,3 ரன்கள் வரை ஓடியே எடுத்ததால், மேக்ஸ்வெல் என் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார்' என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சார் கலக்கிட்டீங்க'!.. 'இல்ல என்ன மன்னிச்சிடுங்க... நான் பண்ணது பெரிய தப்பு'!.. 'அது இல்ல சார்'... 'அய்யோ ப்ளீஸ்'!.. விரட்டி விரட்டி மன்னிப்பு கேட்கிறாரு!.. என்னவா இருக்கும்?
- ‘சந்தேகமே வேண்டாம்’!.. ‘இனி அவருக்கு ப்ளேயிங் 11-ல இடம் கிடைக்குறது கஷ்டம்தான்’.. இளம்வீரரை கடுமையாக சாடிய முன்னாள் வீரர்கள்..!
- சென்னை பிட்ச்ச சென்னை வாசிகளவிட... கோலி நல்லா தெரிஞ்சுவச்சிருக்காரு!.. பிட்ச்சை வைத்து மேட்ச்சை மாற்றிய கோலியின் ராஜதந்திரம்!.. ஆர்சிபி ஜெயிச்சது 'இப்படி' தான்!
- ‘ஏலத்துல எடுத்து அவருக்கு சில வேலையை ஒதுக்கியிருக்கோம்’!.. ‘பக்காவா முடிச்சு கொடுத்துட்டார்’.. இளம்வீரரை புகழ்ந்து தள்ளிய கோலி..!
- ‘ஆரம்பத்துல சிரிச்ச முகத்தோட இருந்தாங்க’!.. அந்த ஒரு ஓவர்ல எல்லாமே ‘தலைகீழா’ மாறிடுச்சு.. நொந்துபோன காவ்யா மாறன்..!
- 'வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!.. மேக்ஸ்வெல் டா'!!.. 5 வருஷம் கழிச்சு... IPL-ல் பின்னியெடுத்துட்டாரு!.. எப்படி சாத்தியமானது?
- 'தாங்கவே முடியல... அவ்ளோ வேதனையா இருக்கு'!.. எல்லாத்துக்கும் காரணம் 'இது' தான்!.. மனமுடைந்த வார்னர்!.. ஜெயிக்க வேண்டிய மேட்ச் போச்சு!.. எப்படி நடந்தது?
- 'நல்ல வேல... வழியில யாரும் குறுக்க வரல... ஒரே போடா போட்ருப்பாரு'!.. chair-ஐ தூக்கி அடித்து... உச்சகட்ட ஆவேசத்தில் கோலி!.. என்ன நடந்தது?
- "டேய் சுந்தர்... நீ அந்த பக்கம் போ!".. செல்லமாக அதட்டிய நட்டு!.. மீண்டும் சீண்டிய சுந்தர்!.. இது சரிபட்டு வராது!.. ரெண்டு பேரும் சேர்ந்து... செம்ம ரகளை!
- 'மேட்ச்'க்கு நடுவே நடந்த காதல் 'proposal'.. "இந்த 'ஜோடி'ய ஞாபகம் இருக்கா??.." மீண்டும் வைரலாகும் ஜோடிகளின் 'புகைப்படம்'.. அதுக்கும் 'ஐபிஎல்'க்கும் உள்ள 'கனெக்ஷன்'!!