"இந்தியா 'டீம்'க்கு அடுத்த ஓப்பனர் 'ரெடி'... சீக்கிரம் இவர 'டீம்'ல எடுங்க..." 'இளம்' வீரரை கொண்டாடித் தள்ளிய 'நெட்டிசன்கள்'!! 'காரணம்' என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் விஜய் ஹசாரே கோப்பை தொடரும் நடைபெற்று வருகிறது.

இதில், நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில், கேரள அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கர்நாடக அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில், டாஸ் வென்ற கேரள அணி, பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், கர்நாடக அணியின் தொடக்க வீரர்கள் சமர்த் 192 ரன்களும், தேவ்தத் படிக்கல் 101 ரன்களும் எடுத்தனர்.

மேலும், இந்த தொடரில், இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள தேவ்தத் படிக்கல், நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக சதமடித்துள்ளார். மொத்தமாக 4 சதங்கள் மற்றும் 2 அரை சதங்களுடன் 673 ரன்களை இந்த தொடரில் அவர் குவித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில், இந்திய கேப்டன் விராட் கோலி நான்கு சதங்கள் அடித்து அசத்தியருந்தார்.

இந்நிலையில், தேவ்தத் படிக்கலும் அந்த சாதனையை செய்துள்ளார். இவர் கடந்த ஐபிஎல் சீசனில், பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.











இதனிடையே, மிகவும் இளம் வயதில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்க வீரர் ஒருவர் கிடைத்து விட்டதாகவும், வரவிருக்கும் தொடர்களில் தேவ்தத் படிக்கலை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்