'அது ரொம்ப ஸ்பெஷலான மெசேஜ்’... ‘சீனியர் நட்சத்திர வீரர் அனுப்பிய குறுஞ்செய்தி’... ‘குஷியான இளம் வீரர்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சீனியர் நட்சத்திர வீரர் ஒருவர் அனுப்பிய குறுஞ்செய்தி, தனக்கு மிகவும் ஸ்பெஷலானது என பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் உற்சாகத்துடன் கூறியுள்ளார்.

ஐக்கிய அமீரகத்தில் அண்மையில் முடிந்து ஐபிஎல் தொடரில் முதல் சீனிலேயே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இளம் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல். இதனால் வளர்ந்து வரும் வீரர் என்ற விருதும் அவருக்கு அளிக்கப்பட்டது.

15 போட்டிகளில் விளையாடியுள்ள தேவ்தத் படிக்கல், இந்த சீசனில் 473 ரன்களை  குவித்துள்ளார். இதில் 5 அரை சதங்களும் அடங்கும். இந்நிலையில் தனது ஆட்டத்தை பாராட்டி ஆர்சிபி அணியின் சக வீரரும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஏபி டி வில்லியர்ஸ் அனுப்பிய குறுஞ்செய்தி குறித்து பகிர்ந்துள்ளார் தேவ்தத் படிக்கல்.

‘மாடர்ன் கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் உடன் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது  நல்ல அனுபவமாக இருந்தது. கிரிக்கெட் குறித்த நிறைய நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். இதில் கேப்டன் விராட் கோலியுடன் களத்தில் நீண்ட நேரம் விளையாடும் வாய்ப்பு கிடைத்த எனக்கு, ஏபி டி வில்லியர்ஸ் உடன்  விளையாட கிடைக்காமல் போனது. அவர் பேட் செய்யும்போது மறு முனையில் நின்று பார்த்துக் கொண்டிருக்க ஆசையாக இருக்கும். முதல் பந்திலேயே பவுலர்களை டார்கெட் செய்யும் பேட்ஸ்மேன் அவர்.

மும்பை உடனான ஆட்டத்தில் 70 ரன்களை குவித்து இருந்தேன். அந்த ஆட்டம் முடிந்து பயணம் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு குறுஞ்செய்தி அனுப்பி எனது ஆட்டத்தை பாராட்டி இருந்தார்  ஏபிடி வில்லியர்ஸ். நீங்கள் அபாரமாக விளையாடுகிறீர்கள். தொடர்ந்து இதே மாதிரியான ஆட்டத்தில் டெலிவர் செய்யுங்கள். உங்கள் ஆட்டத்தை அனுபவித்து விளையாடுங்கள் என சொல்லி இருந்தார். அது எனக்கு மிகவும் ஸ்பெஷலான மெசேஜ்’ என உற்சாகத்துடன் கூறியிருக்கார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்